கோல நெருஸ், செப். 15
போர்ட்டிக்சன் இடைத்தேர்தலில் போட்டியிட விருக்கும் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராமிற்கு டத்தோஸ்ரீ முகமட் நஸ்ரி ஆதரவு தெரிவித்ததற்கு அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படாது என அம்னோவின் தலைவர் டத்தோஸ்ரீ ஸாஹிட் ஹமிடி குறிப்பிட்டுள்ளார்.
நஸ்ரி தனிப்பட்ட முறையில் ஆதரவு தெரிவித்திருக்கிறாரே தவிர கட்சியின் சார்பில் அல்ல. எனவே, அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படாது என்று ஸாஹிட் கூறினார்.
நஸ்ரியின் ஆதரவு தனிப்பட்ட ஆதரவு என்றும் அது கட்சியைப் பிரதிநிதிக்கவில்லை என்பதாலும் அவரின் அறிவிப்புக்குத் தாங்கள் மதிப்பும் அளிப்பதாக பாஸ் கட்சியின் 64ஆவது பொதுப்பேரவைக் கூட்டத்தில் கலந்து கொண்டப் பின்னர் ஸாஹிட் செய்தியாளர்கள் சந்திப்பில் இவ்வாறு தெரிவித்தார்.


