திங்கட்கிழமை, ஜூன் 24, 2019
அண்மையச் செய்திகள்
முகப்பு > அரசியல் > நாட்டை ஆட்சி செய்வதற்கு எனக்குத் தகுதியில்லையா? – அன்வார் இப்ராஹிம்
அரசியல்பொதுத் தேர்தல் 14முதன்மைச் செய்திகள்

நாட்டை ஆட்சி செய்வதற்கு எனக்குத் தகுதியில்லையா? – அன்வார் இப்ராஹிம்

புத்ராஜெயா, செப்.17-

வயதாகி விட்டதால் நாட்டை ஆட்சி செய்வதற்கு தமக்குத் தகுதியில்லை என்று ஒருசில இளம் தலைமுறையினர் கூறுவதை பிகேஆர் தலைவர், டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் மறுத்தார்.

சிறையில் 11 ஆண்டுகள் நான் இருந்தது மக்கள் குறிப்பாக குறைந்த வருமானம் பெறுவோரின் துயரத்தை எனக்கு நன்கு உணர்த்தியது.

இளம் தலைமுறையினரில் சிலர் எனக்கு வயதாகி விட்டதால் நாட்டை ஆட்சி செய்வதற்கு நான் பொருத்தமானவன் இல்லை என்று கூறுவதாக புத்ராஜெயா அனைத்துலக மாநாட்டு மையத்தில் நடைபெற்ற இரவு விருந்து நிகழ்ச்சியில் உரையாற்றிய போது அன்வார் குறிப்பிட்டார்.

நான் சிறையில் இருந்த காலத்தில் 90 விழுக்காடு வசதி குறைந்தவர்கள், அந்நியர்களுடன் பழகியிருக்கிறேன். இதில் ஒரு ஜீன்சைத் திருடிய குற்றத்திற்காக இளைஞர் ஒருவரைச் சிறையில் அடைத்ததையும் நான் பார்த்திருக்கிறேன் என்று அன்வார் மேலும் கூறினார்.

முன்னதாக இடைத்தேர்தலில் அன்வார் போட்டியிட்டு நாடாளுமன்றத்திற்குத் திரும்ப வழி விடும் வகையில் போர்ட்டிக்சன் தொகுதி எம்.பி, டத்தோ டேனியல் பாலகோபால் அப்துல்லா தமது தொகுதியை விட்டுக் கொடுத்தார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன