வியாழக்கிழமை, ஜூன் 20, 2019
அண்மையச் செய்திகள்
முகப்பு > உலகம் > இந்தோனேசியாவில் சுனாமி; 40க்கும் மேற்பட்டோர் பலி
உலகம்முதன்மைச் செய்திகள்

இந்தோனேசியாவில் சுனாமி; 40க்கும் மேற்பட்டோர் பலி

ஜகார்த்தா, டிச 23
இந்தோனேசியாவில் உள்ள கடற்கரை பகுதியான சுந்தா ஸ்ட்ரேய்ட் பகுதியில் நேற்றிரவு திடீரென சுனாமி அலை தாக்கியது. இந்த சுனாமியால் பாண்டேக்லாங்க், செராங் மாவட்டங்கள் பாதிக்கப்பட்டன.

இச்சம்பவத்தில் இதுவரை 43 பேர் பரிதாபமாக உயிரிழந்த நிலையில் 550-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். பலியானவர்களில் பெரும்பாலானோர் பாண்டேக்லாங், தெற்கு லாம்புங் மற்றும் ஷெராங் பகுதியை சேர்ந்தவர்களாவர். இதில் 430 வீடுகள், 9 விடுதிகள், 10 படகுகள் சேதமடைந்தன.

அனாக் கிராகட்டாயு என்ற எரிமலை வெடித்ததன் மூலம் இந்த சுனாமி அலை தாக்குதல் ஏற்பட்டிருக்கலாம் என இந்தோனேசிய பேரிடர் நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆனால், சுனாமி ஏற்பட்டதற்கான உண்மையான காரணம் இதுவரை தெரியவில்லை.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன