ஜன.28இல் வாழ்க்கைச் செலவின உதவித் தொகை -லிம் குவான் எங் 

0
5

கோலாலம்பூர், டிச.26-
பிஎஸ்எச் எனப்படும் வாழ்க்கைச் செலவின உதவித் தொகையின் முதல் கட்டம் எதிர்வரும் ஜனவரி 28ஆம் தேதி வழங்கப்படும் என்று நிதி அமைச்சர்  அறிவித்துள்ளார்.

இந்த உதவித்தொகை இதற்கு முந்தைய நடைமுறையின் தரவில் உள்ள பெயரின் அடிப்படையில் வழங்கப்படும்.

இதற்குப் பழைய தரவைப் பயன்படுத்துவதால் இதில் உதவித் தொகை பெறத் தகுதி இல்லாதவர்களின் பெயரும் அடங்கியிருக்கும். ஆனால் இவையனைத்தையும் அடுத்தாண்டு பிப்ரவரி மாதத்திற்கு முன்பே செயல்படுத்தி விட வேண்டியது அவசியமாகும்.

இதில் உதவித் தொகை வழங்கப்பட்டு 2,3ஆம் கட்ட உதவித் தொகை வழங்கப்படுவதற்கு முன்பு யார் குறைந்த வருமானம் பெறுவோரில் இல்லாதிருப்பவர்கள் என்று அடையாளம் காணப்பட்டு தரவு புதுப்பிக்கப்படும். இந்தத் தரவு புதுப்பிப்பு நடவடிக்கை 2, 3ஆம் கட்ட உதவித் தொகை பெறுபவர்களுக்காக மேற்கொள்ளப்படுகிறது.

அடுத்த ஆண்டிற்கான 300 வெள்ளி முதல் கட்ட உதவித் தொகையின் மூலம் 120 கோடி வெள்ளி ஒதுக்கீட்டின் வாயிலாக 41 லட்சம் குடும்பங்கள் பயனடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் 2019 வரவு செலவு திட்டத்தில் தாக்கல் செய்யப்பட்டதைப் போல் குறைந்த வருமானம் பெறுவோரின் வாழ்க்கைச் செலவினங்களைக் குறைக்க இத்திட்டத்தை அரசு தொடர்ந்து மேற்கொள்ளும்.