Homeஅரசியல்வேதமூர்த்தியை பதவிவிலகக் கூறினேனா? உண்மை அறியாமல் அவதூறுகளை பரப்பாதீர்! - செனட்டர் டத்தோ சம்பந்தன்

வேதமூர்த்தியை பதவிவிலகக் கூறினேனா? உண்மை அறியாமல் அவதூறுகளை பரப்பாதீர்! – செனட்டர் டத்தோ சம்பந்தன்

காஜாங், டிச. 27-

பிரதமர் துறையின் கீழ் செயல்படும் ஒற்றுமை அமைச்சர் வேத மூர்த்தியை தாம் பதவி விலகக் கூறியதாக சில தரப்பினர் சமூக தளங்களில் தவறான தகவல்களை பரப்பி வருவதாக ஐபிஎப் கட்சியின் தேசிய தலைவர் செனட்டர் டத்தோ சம்பந்தன் கூறினார்.

அண்மையில் கூடிய தமது கட்சியின் மத்திய செயலவை கூட்டத்தில் ஒற்றுமை அமைச்சர் வேதமூர்த்தி பிளவுபடாத ஆதரவை வழங்குவதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அது குறித்து நடந்த செய்தியாளர் சந்திப்பில் தாம் கூறிய செய்தியை தவறுதலாக வெளியிட்ட ஒரு தனியார் செய்தி நிறுவனம் பிறகு அந்தச் செய்தியை திருத்தி வெளியிட்டது.

முதல்நாள் வெளிவந்த செய்தியை சமூக ஊடகங்களில் வெளியிட்டு சில தரப்பினர் உண்மைக்குப் புறம்பான செய்திகளை வெளியிட்டு வருவது நமக்கு வருத்தம் அளிப்பதாக சம்பந்தன் கூறினார்.

நம்பிக்கை கூட்டணியில் உள்ள இந்திய தலைவர்கள் கூட ஒற்றுமை அமைச்சர் வேதமூர்த்திக்கு நேரடியாக ஆதரவு தெரிவிக்க மறுத்து வரும் நிலையில் தாமும் தமது கட்சியும் முதன்முதலில் அவருக்கு முழுமையான ஆதரவு வழங்கியதாக கூறினேன் என அவர் குறிப்பிட்டார்.

தொலைக்காட்சியில் ஒளியேற்றிய செய்தியை தவிர்த்து அன்றைய நாள் பத்திரிகைகளில் வெளிவந்த அனைத்து செய்திகளிலும் தாம் குறிப்பிட்டிருந்த செய்தி தெள்ளத்தெளிவாக வந்திருந்தது

அப்படி இச்செய்தி குறித்து விளக்கம் கேட்க விரும்பியவர்கள் நேரடியாக என்னை தொடர்பு கொண்டிருக்கலாம். அதை விட்டுவிட்டு சமூக தளங்களில் தமது பெயருக்கு களங்கம் விளைவிப்பதோடு உண்மைக்குப் புறம்பான செய்தியை வெளியிட்டு வருவது தவறான நடவடிக்கை என அவர் குறிப்பிட்டார்.

ஒற்றுமை அமைச்சர் வேதமூர்த்திக்கு நம்பிக்கை கூட்டணி அரசாங்கம் தொடர்ந்து அங்கீகாரம் வழங்க வேண்டும். அவருக்கு சில காலங்கள் ஒற்றுமை அமைச்சராகப் பணியாற்ற வாய்ப்பு வழங்கப்பட்ட பின்னர்தான் எந்த முடிவையும் எடுக்க வேண்டும் என்று நான் வலியுறுத்தினேன்.

ஆலய பிரச்சினைகளை சரியாக கையாளத் தவறியதால் ஒற்றுமையை நிலைநாட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்காததால் வேதமூர்த்தி பதவி விலக வேண்டுமென இளைஞர் விளையாட்டுத் துறை அமைச்சர் சையிட் சாடிக் கூறியிருந்தார். அவருடைய கருத்து தவறு என்பதை நான் சுட்டிக்காட்டினேன்.

ஆலய விவகாரத்தில் பல இளைஞர்கள் பங்கேற்றார்கள் அந்த வகையில் அந்த இளைஞர்களுக்கு ஒற்றுமையைப் போதிக்க எம்மாதிரியான நடவடிக்கைகளை இளைஞர் விளையாட்டு அமைச்சு முன்னெடுக்க முடியும் என இது குறித்து கேள்வி எழுப்பியிருந்தேன். இந்நிலையில் நான் கூறாத ஒரு விஷயத்தை சமூக தளங்களில் பரப்பும் நடவடிக்கையை உடனடியாக நிறுத்திக்கொண்டு உண்மையை அறிந்துகொள்ள வேண்டும் என சம்பந்தன் கேட்டுக் கொண்டார்.

spot_img

latest articles

explore more