Homeஅரசியல்பிகேஆர் தேசிய உதவித் தலைவர்கள்; ரபிஸி ரம்லி உட்பட மூவர் நியமனம்

பிகேஆர் தேசிய உதவித் தலைவர்கள்; ரபிஸி ரம்லி உட்பட மூவர் நியமனம்

கோலாலம்பூர், டிச. 28
பாண்டான் தொகுதியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரபிஸி ரம்லி பிகேஆர் கட்சியின் தேசிய உதவித் தலைவராக நியமனம் பெற்றுள்ளார் பிகேஆர் தேசிய தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று அறிவித்தார்.

அவருடன் தஞ்சோங் மாலிம் நாடாளுமன்ற உறுப்பினர் சாங் லீ காங், சாராத்தோப் நாடாளுமன்ற உறுப்பினர் அலி பிஜு ஆகியோரும் கட்சியின் தேசிய உதவித் தலைவராக நியமனம் பெற்றுள்ளனர்.

ஹங் துவா ஜெயா நாடாளுமன்ற உறுப்பினரான டத்தோஸ்ரீ ஷம்சுல் இஸ்கண்டார் கட்சியின் தகவல் குழுத் தலைவராகவும் செத்தியாவங்சா நாடாளுமன்ற உறுப்பினரான நிக் நஸ்மி நிக் அகமது கட்சியின் மேற்பார்வை செயலாளராகவும் நியமனம் பெற்றுள்ளனர்.

உள்நாட்டு வர்த்தக பயனீட்டாளர் நலத்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சைபுடின் நசுட்டியோன் இஸ்மாயில் பிகேஆர் தலைமைச் செயலாளராக நீடிக்கும் வேளையில் பிகேஆர் தேசிய பொருளாளராக செமாம்பு சட்டமன்ற உறுப்பினர் லீ சியான் சுங் நியமனம் பெற்றுள்ளார்.

சிகாமாட் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோஸ்ரீ டாக்டர் எட்மண் சந்தாரா பிகேஆர் துணைத் தலைமைச் செயலாளராகவும் விவசாயம், விவசாயம் சார்ந்த துணையமைச்சர் சிம் சீ சின், எஸ்.மணிவண்ணன் ஆகியோர் கட்சியின் தகவல் குழு துணைத் தலைவராக நியமனம் பெற்றுள்ளனர்.

spot_img

latest articles

explore more