திங்கட்கிழமை, ஜூன் 24, 2019
அண்மையச் செய்திகள்
முகப்பு > உலகம் > பிலிப்பைன்சில் 7.0 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்; சுனாமியின் அறிகுறியா?
உலகம்முதன்மைச் செய்திகள்

பிலிப்பைன்சில் 7.0 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்; சுனாமியின் அறிகுறியா?

மணிலா, டிச 29
பிலிப்பைன்சின் தெற்கு பகுதியிலுள்ள மிண்டானோ தீவில் இன்று காலை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவு கோலில் 7.0 ஆக பதிவாகியிருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஜெனரல் சான்டோஸ் நகரின் 193 கிலோ மீட்டர் தொலைவில் பூமிக்கடியில் 59 கிலோ மீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால், அப்பகுதியிலுள்ள கட்டிடங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன.

இதனிடையே, இந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து அப்பகுதியை ஒட்டியுள்ள பசிபிக் கடற்பகுதியில் சுனாமி அலைகள் உருவாக வாய்ப்பு உள்ளதாக பசிபிக் சுனாமி எச்சரிக்கை விடுத்துள்ளது.

குறிப்பாக நிலநடுக்க பகுதியிலிருந்து 300 கிலோ மீட்டர் தொலைவிற்கு பிலிப்பைன்ஸ் மற்றும் இந்தோனேசிய கடற்பகுதியில் சுனாமி உருவாக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன