சீபில்ட் ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயக் கலவரம்; விசாரணை அறிக்கை டிபிபியிடம் ஒப்படைப்பு -டான்ஸ்ரீ முகமட் ஃபுஸி ஹருண்

0
6

கோலாலம்பூர், டிச.29-

சுபாங் ஜெயா, சீபில்ட் ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தில் நிகழ்ந்த கலவரம் குறித்த விசாரணை அறிக்கை துணை அரசுத் தரப்பு வழக்கறிஞரிடம் ஒப்படைக்கப்பட்டதாக தேசிய போலீஸ் படைத் தலைவர் டான்ஸ்ரீ முகமட் ஃபுஸி ஹருண் தெரிவித்தார்.

இந்த அறிக்கை கடந்த திங்கள்கிழமை ஒப்படைக்கப்பட்டதாகவும் தற்போது டிபிபியிடமிருந்து இச்சம்பவத்திற்கான உத்தரவிற்காக போலீஸ் காத்துக் கொண்டிருக்கிறது என்று இங்குள்ள போலீஸ் பயிற்சி மையத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் ஃபுஸி ஹருண் குறிப்பிட்டார்.

அதில் தீயணைப்பு வீரர் முகமட் அடிப் முகமட் காசிம் மரணமடைந்தது உட்பட அந்த ஆலயக் கலவரம் தொடர்பான விசாரணைகளும் அடங்கியுள்ளன.

முகமட் அடிப்பின் சவப் பரிசோதனை அறிக்கை இன்னும் முழுமையடையவில்லை. இச்சம்பவம் தொடர்பான விசாரணைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில் சம்பந்தப்பட்டவர்களை நீதிமன்றத்திற்குக் கொண்டு செல்வதற்கான நடவடிக்கைகளையும் நாங்கள் செயல்படுத்துவோம் என்று அவர் கூறினார்.