அண்மையச் செய்திகள்
முகப்பு > அரசியல் > 2019இல் பல்வேறு சவால்கள் -டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம்
அரசியல்முதன்மைச் செய்திகள்

2019இல் பல்வேறு சவால்கள் -டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம்

பெட்டாலிங் ஜெயா, டிச. 29
2019இல் அரசாங்கம் பல சவால்களை எதிர்நோக்க வேண்டியிருக்கும் என்று பிகேஆரின் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.

சமூக பிரச்னைகள், அரசியல் மோதல்கள், நிலையற்ற உலகப் பொருளாதாரம், உட்பட பல சவால்களை சந்திக்க வேண்டியிருக்கும். ஆனால், மாற்றத்தைக் கொண்டு வருவதற்கே மக்கள் நம்மை தேர்ந்தெடுத்துள்ளார்கள் என்பதில் தெளிவாக இருக்க வேண்டும் என்று அவர் சொன்னார்.

உற்பத்திப் பொருள்களின் விலை சரிந்துள்ள நிலையில் மீனவர்கள், சிறு தோட்டக்காரர்கள், தொழிலாளர்கள் ஆகியோர் வருமானம் இல்லாமல் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் தேசிய மேம்பாட்டிலிருந்து விலகாமலும் பார்த்துக் கொள்ளவும் வேண்டும்.

பட்டதாரி மாணவர்களுக்குக் குறைந்த சம்பளம், பொதுமான வேலை குறைவு போன்றவை அதிகரிக்கும் நிலையும் உள்ளது.

2018ஆம் ஆண்டில் நடந்தவற்றை சீர்தூக்கிப் பார்த்து, வரும் ஆண்டில் மாற்றத்தைக் கொண்டுவர நாம் விவேகமாக செயல்படுவதோடு, சிறந்த மலேசியாவை உருவாக்க ஒன்றிணைந்து செயல்பட வேண்டுமென அன்வார் வலியுறுத்தினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன