வியாழக்கிழமை, ஜூன் 20, 2019
அண்மையச் செய்திகள்
முகப்பு > குற்றவியல் > காருக்குள் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்த இந்திய ஆடவர்; சுங்கைப்பட்டாணியில் சம்பவம்
குற்றவியல்முதன்மைச் செய்திகள்

காருக்குள் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்த இந்திய ஆடவர்; சுங்கைப்பட்டாணியில் சம்பவம்

சுங்கைப்பட்டாணி, டிச. 29
இங்குள்ள தாமான் பண்டார் பாரு சுங்கைப்பட்டாணியில் உள்ள இரவு சந்தை அருகே நிசான் கிரான்ட் லிவினா வெள்ளை நிற காருக்குள் இந்திய ஆடவர் கத்தி குத்து காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார்.

இன்று காலை 4.15 மணியளவில் அங்கு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தவர் காருக்குள் ஒரு நபர் இறந்து கிடந்ததை கண்டு பெடோங் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்ததாக கோலமுடா மாவட்ட போலீஸ் துணைத் தலைவர் சூப்ரிண்டெண்டன்ட் சசாலி அடாம் தெரிவித்தார்.

ஏ.முனியாண்டி (வயது 41) எனும் அந்த ஆடவர் ஓட்டுநர் இருக்கையில் இறந்து கிடந்ததாகவும் அவருடைய உடலில் பல இடங்களில் கத்திக் குத்து காயங்கள் இருந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

இச்சம்பவம் குற்றவியல் சட்டம் பிரிவு 302 கீழ் தீவிர விசாரணை நடத்தப்படுகிறது. அந்த ஆடவரின் உடல் சவப்பரிசோதனைக்காக சுல்தானா பஹியா அலோர்ஸ்டார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது என்று அவர் கூறினார்.

கடந்த சில ஆண்டுகளாக சிங்கப்பூரில் வேலை செய்து வந்த முனியாண்டி சில தினங்களுக்கு முன்பு சுங்கைப்பட்டாணி திரும்பி வந்ததாக தெரிகிறது. முனியாண்டிக்கு சொந்தமான எந்த பொருளும் களவாடப்படவில்லை. இந்த நிலையில் இச்சம்பவத்திற்கு என்ன காரணம் என்பதை போலீஸ் தீவிர விசாரணை செய்து வருவதாக சசாலி அடாம் தெரிவித்தார்.

முனியாண்டியின் உடலில் 13 இடங்களில் கத்திக் குத்து காயங்கள் இருந்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் இது வரை யாரும் கைது செய்யப்படவில்லை.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன