திங்கட்கிழமை, ஜூன் 24, 2019
அண்மையச் செய்திகள்
முகப்பு > அரசியல் > மக்களுக்காகவே உழைக்கிறோம்! முகமட் அஸ்மின் அலி
அரசியல்பொதுத் தேர்தல் 14முதன்மைச் செய்திகள்

மக்களுக்காகவே உழைக்கிறோம்! முகமட் அஸ்மின் அலி

பெட்டாலிங் ஜெயா, டிச. 31-

வாக்குறுதியளித்தபடி அரசு அமைத்த முதல் 100 நாட்களில் பக்காத்தான் ஹராப்பான் ஏராளமான திட்டங்களைச் செயல்படுத்தி விட்டது என தமது புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் பொருளாதார விவகாரத் துறை அமைச்சர், டத்தோஸ்ரீ முகமட் அஸ்மின் அலி கூறியுள்ளார்.

தற்போது பொருளாதார வளர்ச்சியைத் துரிதப்படுத்துவதிலும் மக்களின் நல்வாழ்வுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது.

இதில் பிரதமர், துன் டாக்டர் மகாதீர் முகமட் தலைமைத்துவத்தின் கீழ் ஆட்சியைக் கைப்பற்றிய முதல் 6 மாதங்களில் மலேசியாவை பொருளாதாரத்தில் முன்னோக்கிச் செல்வதற்கான மறுசீரமைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இந்தப் பயணம் உண்மையில் மிகவும் சவாலானதாக மட்டுமின்றி மலேசியாவை ஆசியானின் புலியாக மீண்டும் உருவெடுப்பதற்கு ஒரு கடுமையான போராட்டச் சூழலையும் ஏற்படுத்தும் என்று ஓர் அறிக்கையில் அஸ்மின் அலி குறிப்பிட்டார்.\

கடந்த 2018ஆம் ஆண்டு உண்மையில் ஒரு வரலாற்றுப்பூர்வமான ஆண்டாகும். அதில் நடைபெற்ற 14ஆவதுப் பொதுத்தேர்தல் வாயிலாக லஞ்ச ஊழலற்ற அரசை மாற்றி பக்காத்தானின் வெற்றியைப் பொதுமக்கள் உறுதி செய்தனர்.

இது உண்மையில் வருங்காலத் தலைமுறையினரின் வாழ்க்கையைச் சிதைக்கும் தரப்பினரை வீழ்த்துவதற்கான உச்சக்கட்ட நடவடிக்கையாகும் என்று கோம்பாக் தொகுதி எம்.பி.யுமான அஸ்மின் அலி மேலும் கூறினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன