Homeஅரசியல்வாடிக்கையாளர்களை கருத்தில் கொண்டே எண்ணெய் விலை நிர்ணயிக்கப்படும் -துன் மகாதீர்

வாடிக்கையாளர்களை கருத்தில் கொண்டே எண்ணெய் விலை நிர்ணயிக்கப்படும் -துன் மகாதீர்

லங்காவி, ஜன 1
வாடிக்கையாளர்கள் மற்றும் பயனீட்டாளர்களின் சேவையை கருத்தில் கொண்டே பெட்ரோல் , டீசலுக்கான புதிய விலை நாளை நடைபெறும் அமைச்சரவைக் கூட்டத்திற்கு பின்னர் தீர்மானிக்கப்படும் என பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் தெரிவித்தார்.

எண்ணெய் விலையை அரசு குறைக்க தயாராக இருந்தாலும் விற்பனையாளர்கள் அதில் சற்று வருமானம் பார்க்கவே விரும்புகின்றனர். இதில் விற்பனையாளர்களுக்கு வருமானம் கிடைக்க விட்டால் அவர்கள் எண்ணெயை விற்க முடியாமலும் எண்ணெய் நிலையங்கல் இல்லாமலும் போய்விடும்.

எனவே, எண்ணெய் விலை குறைப்பது பற்றிய முடிவு எடுப்பதற்கு முன்பு விற்பனையாளர்கள் மற்றும் பயனீட்டாளர்கள் குறித்து பரிசீலனை செய்யப்படும் என்று லங்காவியின் மீண்டும் பள்ளிக்குப் போகலாம் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் இதனை தெரிவித்தார்.

தற்போது ரோன்95 வெ.2.20, ரோன்97 வெ.2.50, டீசல் வெ.2.18 விலையில் விற்கப்படுகின்றன.

spot_img

latest articles

explore more