வியாழக்கிழமை, ஜூன் 20, 2019
அண்மையச் செய்திகள்
முகப்பு > அரசியல் > புகை பிடிக்கும் தடை அகற்றப்படாது -டத்தோஸ்ரீ டாக்டர் ஸுல்கிப்ளி 
அரசியல்சமூகம்முதன்மைச் செய்திகள்

புகை பிடிக்கும் தடை அகற்றப்படாது -டத்தோஸ்ரீ டாக்டர் ஸுல்கிப்ளி 

புத்ராஜெயா, ஜன.4
புகை பிடிக்கும் தடை தொடந்து நிலை நிறுத்தப்படும் என சுகாதார அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் ஸுல்கிப்ளி அகமட் தெரிவித்தார்.

கடந்த 1ஆம் தேதி இத்திட்டம் அமல்படுத்தப்பட்டது. 2020ஆம் ஆண்டில் மலேசியர்களை மேம்பட்ட சமுதாயமாக உருவாக்க இத்திட்டம் ஒரு பகுதியாக பங்காற்றவுள்ளது என அவர் சொன்னார்.

இத்திட்டத்தின் பலனை விரைவில் மதிப்பீடு செய்து விட முடியாது, இருப்பினும் பொதுமக்களிடையே இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது என்று அவர் சொன்னார்.

உணவருந்தும் இடத்தைப் புகை பிடிக்கத் தடை செய்யப்பட்ட பகுதியாக்குதல் மற்றும் சிகரெட் புகை இல்லாத உணவகங்கள் ஆகிய திட்டங்களைத் தொடக்கி வைத்த பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் டத்தோஸ்ரீ டாக்டர் ஸுல்கிப்ளி இதனை தெரிவித்தார்.

புகை பிடிப்பதை தடை செய்யும் அமலாக்க நடவடிக்கைகள் வெற்றியடைவதை உறுதி செய்ய பொது மக்களின் கருத்துகளை அமைச்சு வரவேற்கின்றது என்று அவர் குறிப்பிட்டார்.

இந்த 6 மாதக் காலத்தில் புகைப்பதால் ஏற்படும் ஆபத்துகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துதல் போன்ற நடவடிக்கைகளை அமைச்சு மேற்கொள்ளும் என அவர் கூறினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன