வியாழக்கிழமை, ஜூன் 20, 2019
அண்மையச் செய்திகள்
முகப்பு > அரசியல் > எண்ணெய் விற்பனையாளர்களுக்கு 3 காசு கழிவு
அரசியல்சமூகம்முதன்மைச் செய்திகள்

எண்ணெய் விற்பனையாளர்களுக்கு 3 காசு கழிவு

ஜோர்ஜ்டவுன், ஜன. 5
எண்ணெயின் விலையை வாராந்திர முறையில் மாற்றியமைத்ததால் எண்ணெய் நிலைய உரிமையாளர்கள் இழப்பை சந்திக்கின்றனர். எனவே, அவர்களுக்கு லிட்டர்ருக்கு 3 காசுகள் கழிவாகத் தர அரசு முடிவெடுத்துள்ளதாக நிதியமைச்சர் லிம் குவான் எங் தெரிவித்துள்ளார்.

ஜனவரி 2ஆம் தேதி நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அவர் கூறினார்.

எண்ணெய் விலை நிர்ணயிப்பை மாற்றியமைப்பதன் மூலம் கோடி வெள்ளியிலிருந்து வெ.4 கோடி வரை நஷ்டம் ஏற்படுத்துவதாக எண்ணெய் விற்பனையாளர் சங்கம் அறிவித்திருந்தது.

எனவே, இந்த இழப்பு உண்மையானதுதானா என்பதை உள்நாட்டு வர்த்தகம் மற்றும் பயனீட்டாளர் அமைச்சர் டத்தோஸ்ரீ சைபுடின் நசுத்தியோனே உறுதிப்படுத்த வேண்டுமென லிம் குவான் எங் கேட்டுக் கொண்டார்.

இன்று பின்னிரவு 12.01லிருந்து ரோன் 95 பெட்ரோல் விலை 2 வெள்ளி 20 காசிலிருந்து 27 காசுகள் குறைக்கப்பட்டு 1 வெள்ளி 93 காசாகவும் ரோன் 97 பெட்ரோல் 2 வெள்ளி 50 காசிலிருந்து 2 வெள்ளி 23 காசாக ஆகக் குறைக்கப்பட்டது. டீசலின் விலை 2 வெள்ளி 18 காசிலிருந்து 14 காசுகள் குறைக்கப்பட்டு 2 வெள்ளி 4 காசாக விற்கப்பட்டு வருகிறது. இந்தப் புதிய விலைகள் ஜனவரி 11ஆம் தேதி வரையில் அமலில் இருக்கும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன