வியாழக்கிழமை, ஜனவரி 23, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > அரசியல் > குறைந்த வருமானம் பெறுபவர்களுக்கு 10 லட்சம் கட்டுப்படி விலை வீடுகள் -ஸுரைடா கமாருடின்
அரசியல்சமூகம்முதன்மைச் செய்திகள்

குறைந்த வருமானம் பெறுபவர்களுக்கு 10 லட்சம் கட்டுப்படி விலை வீடுகள் -ஸுரைடா கமாருடின்

ஜோர்ஜ்டவுன், ஜன. 5
குறைந்த வருமானம் பெறுபவர்களுக்கு கட்டுப்படி விலை வீடுகளை கட்டித்தருவதற்கு ஊராட்சித் துறை அமைச்சு திட்டமிட்டுள்ளதாக அதன் அமைச்சர் ஸுரைடா கமாருடின் தெரிவித்துள்ளார்.

அடுத்து 10 ஆண்டுகளில் 10 லட்சம் கட்டுப்படி விலை வீடுகளை நிர்மாணிக்கப்படும். குறைந்த வருமானம் பெறக்கூடிய மக்கள் சொந்த வீடுகளைப் பெறுவதற்கு இத்திட்டம் உதவும். தேசிய வீடமைப்பு நிறுவனத்தின் கீழ் உள்ள அனைத்து வீடமைப்பு திட்டங்களையும் அமைச்சு ஒருங்கிணைக்கும் என்று அவர் சொன்னார்.

இவ்வாண்டு தொடங்கி ஆண்டுக்கு 1 லட்சம் வீடுகளை நிர்மாணிக்க அமைச்சு திட்டமிட்டுள்ளது. இவை அனைத்தும் கட்டுப்படி விலை வீடுகள் ஆகும். பி 40 பிரிவு மக்கள் உட்பட அனைவருக்கும் இந்த வீடுகள் கட்டப்படுகின்றன. இதன்படி பி 40 பிரிவு மக்களும் சொந்த வீடுகளை பெற முடியும் என்று அமைச்சர் குறிப்பிட்டார்.

ஒவ்வொரு மாநிலத்திலும் எத்தனை வீடுகள் எந்தெந்த இடத்தில் கட்டப்படும் என்பது பற்றிய விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும். அதோடு, இதுபற்றி சம்பந்தப்பட்ட மாநில அரசுகளுடனும் பேச்சு வார்த்தைகள் நடத்தப்படும் என்று அவர் சொன்னார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன