வியாழக்கிழமை, ஜூன் 20, 2019
அண்மையச் செய்திகள்
முகப்பு > அரசியல் > பேரரசர் பதவி விலகினார்
அரசியல்முதன்மைச் செய்திகள்

பேரரசர் பதவி விலகினார்

பெட்டாலிங் ஜெயா, ஜன. 6-
நாட்டின் 15ஆவது பேரரசர்  சுல்தான் முகமட் v இன்று பதவி விலகினார்.

அரசியலமைப்பு விதி 32(3)இன் கீழ் பேரரசர் பதவி விலகியிருப்பதாக அரண்மனையின் பிஜாயா டிராஜா டத்தோ வான் அகமட் டாஹ்லான் அப்துல் அஸிஸ் அறிவித்தார்.

அந்த விலகலை பேரரசர் கடிதம் மூலமாக ஆட்சியாளர்களின் மாநாட்டுச் செயலாளரின் வழி மலாய் ஆட்சியாளர்களுக்குத் தெரிவித்திருப்பதாக வான் அகமட் இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

பதவியில் இருந்தபோது தமது பொறுப்புகளை சிறப்பாக மேற்கொண்டதாகவும் நாட்டின் நிலைத் தன்மைக்கும் ஒற்றுமையை பேணவும் செயல்பட்டதாகப் பேரரசர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 2016 டிசம்பர் 13ஆம் தேதி தம்மை 15ஆவது பேரரசராக நியமித்த மலாய் ஆட்சியாளர்களுக்கும் சிறந்த ஒத்துழைப்பைத் தந்த பிரதமர் மற்றும் கூட்டரசு அரசாங்கத்திற்கும் தமது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொண்டார்.

மக்கள் தொடர்ந்து ஒற்றுமையாக இருந்து நாட்டில் அமைதியும் நல்லிணக்கமும் மேலோங்க பாடுபட வேண்டும் என பேரரசர் கேட்டுக் கொண்டார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன