கேமரன் மலை நாடாளுமன்றத் தொகுதியை அம்னோ கேட்கவில்லை -டத்தோஸ்ரீ வேள்பாரி

0
5

கோலாலம்பூர், ஜன 7-

கேமரன் மலை நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட தேசிய முன்னணியின் முதன்மை உறுப்பு கட்சியான அம்னோ அந்த சீட்டை கேட்கவில்லை என்று மஇகாவின் தலைமைச் செயலாளர் டத்தோஸ்ரீ சா.வேள்பாரி கூறியிருக்கின்றார்.

அந்தத் தொகுதியில் போட்டியிட அம்னோ தொகுதியை கேட்கவில்லை. மாறாக வெற்றி பெறக்கூடிய வேட்பாளர் யார் என்பதை அறிந்து அவரை வேட்பாளராக நிறுத்த வேண்டும் என்பதுதான் அவர்களின் விருப்பமாக இருக்கின்றது.

இப்போது கேமரன் மலை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட கூடிய வேட்பாளர்கள் அடையாளம் காணப்பட்டு வருகின்றார்கள். அதை முடிவு செய்த பின்னர் அது தொடர்பான முழு விவரங்கள் மக்களுக்கும் ஊடகங்களுக்கும் அளிக்கப்படும் என அவர் கூறி இருக்கின்றார்.

கடந்த 14 ஆவது பொதுத் தேர்தலில் கேமரன் மலை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற டத்தோ சிவராஜ் சந்திரனின் வெற்றி செல்லாது என தேர்தல் நீதிமன்றம் அண்மையில் அறிவித்திருந்தது அதனைத்தொடர்ந்து தொகுதியில் இடைத்தேர்தல் நடக்கிறது.

ஜசெக சார்பில் இத்தொகுதியில் 14ஆவது பொதுத் தேர்தலில் போட்டியிட்ட வழக்கறிஞர் மனோகரன் இம்முறையும் போட்டியிடுகிறார். மைபிபிபி கட்சியின் தலைவர் டான்ஸ்ரீ கேவியஸ் களத்தில் இறங்குவதாக ஞாயிற்றுக்கிழமை அறிவித்திருந்தார்.

இச்சூழ்நிலையில்தான் மஇகா கேமரன்மலை நாடாளுமன்றத் தொகுதியை அம்னோவிற்கு விட்டு தருவதாக செய்தி கசிந்தது. இந்த விவகாரம் தொடர்பில் அக்கட்சியின் தலைமைச் செயலாளர் வேள்பாரி தற்போது விளக்கம் அளித்திருக்கிறார்.

ReplyForward