இந்திய ஆடவர் கொலை ! போலீஸ் விசாரணை

0
3

சுங்கை பிப் 26-

சுங்கையில்,  தாமான் ஆர்க்கிட் ஜெயாவிலுள்ள வீடென்றில் புகுந்து திருட முயன்றபோது நிகழ்ந்த கைகலப்பில் இந்திய ஆடவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் இன்று அதிகாலை 2.30 மணியளவில் நிகழ்ந்துள்ளது என்று தாப்பா மாவட்ட போலீஸ் தலைவர் வான் அஸ்ருடின் தெரிவித்தார்.

சம்பந்தப்பட்ட வீட்டில் ஆடவர் போலீசார் மேற்கொண்ட சோதனையில் மூச்சு பேச்சியின்றி இறந்து கிடந்தது இந்திய ஆடவர் என்று தெரிய வந்துள்ளது.

அவர் மீது மேற்கொள்ளப்பட்ட சோதனையில் அவர் இறந்ததை அங்கு வந்த மருத்துவர்கள் உறுத்திப்படுத்தினர்.

இதில் இறந்தவர் அ.கோவலன் ( வயது 31) என்பவர் என்று அடையாளம் கூறப்பட்டது.

இவரின் சடலம் மருத்துவ சவபரிசோதனக்கு ஈப்போ ராஜா பெர்மைசூரி பைனுன் மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டது.

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர் . இதில் 27 வயதிற்கும் 38 வயதிற்கும் இடைப்பட்ட 6  பாகிஸ்தினியர்கள் விசாரணக்கு தடுத்து வைத்துள்ளனர் .