ஜோர்ஜ்டவுன் பிப் 26-
டத்தோஸ்ரீ நஸ்ரி அஸிஸ் சட்டத்துறை தலைவர் பதிவியோடு இன விவகாரத்தை தொடர்புப்படுத்த தேவையில்லை என்று பிகேஆர் தலைவர் டத்தொஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.
நாட்டின் சட்டத்துறை தலைவர் ஒரு மலாய்க்காரராக இருக்க வேண்டும் என்று தேசிய முன்னணி தலைமைச் செயலாளார் டத்தோஸ்ரீ நஸ்ரி செமினி தேர்தல் பிரசாரத்தின்போது கூறியிருந்தார்.
மலாய்க்காரர் அல்லாத சட்டத்துறை தலைவரால் மாமன்னர் முன்னிலையில் அல்-குர்ஆன் மீது பதவி பிரமானம் எடுக்க முடியாது என்று டத்தோஸ்ரீ நஸ்ரி கூறியிருந்தார்.

நீதி நிலைநாட்டப்படுவதற்கு ஏதுவாக ஏற்றுக்கொண்ட பொறுப்பை சிறப்பாக ஆற்றக்கூடிய ஒருவரை மட்டுமே நாம் இங்கே கவனிக்க வேண்டும் என்றார் டத்தோஸ்ரீ அன்வார்.
சட்டத்துறை தலைவர் ஒரு மலாய்க்காரராக இருக்க வேண்டும் என்று சில மலாய்க்காரர்கள் கூறி வருவது உண்மையே. எனினும், இது குறித்து அவர்களிடம் முறையாக வேண்டும்.
நாம் இன்று ஒரு மாறுப்பட்ட சூழலில் வசித்து வருகிறோம். மக்கள் தங்களின் கருத்துகளை கூறுவதற்கு நாம் அவசியம் அனுமதி அளிக்க வேண்டும். அதே நேரத்தில் இந்தக் கருத்துக்கு மாற்றுக் கருத்து கூறுபவர்களுக்கும் நாம் உரிமை அளிப்பது அவசியமாகும் என்று பினாங்கு அனைத்துலக, வர்த்தக மற்றும் முதலிட்டு உச்சநிலை மாநாட்டிற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் இவ்வாறு பேசினார்.


