Homeஅரசியல்செமினி மக்களுக்கோர் மாபெரும் கலாச்சார கலை இரவு

செமினி மக்களுக்கோர் மாபெரும் கலாச்சார கலை இரவு

செமினி, பிப் 26-

செமினி, பண்டார் ரிஞ்சிங் செக்ஷ்ன் 1இல் மாபெரும் கலாச்சார கலை இரவு விமரிசையாக நடைபெறவுள்ளது. குடிநீர், நிலம் மற்றும் இயற்கை வளத்துறை அமைச்சர் டாக்டர் சேவியர் தலைமையில் இன்று புதன்கிழமை இரவு 8.00 மணியளவில் நடைபெறும்.

இங்குள்ள அல்-தாஜ்மஹால் உணவகம் அருகே நடைபெறும் இந்த மாபெரும் கலை நிகழ்ச்சியை பிகேஆர் உலு லாங்காட் தொகுதியின் துணைத் தலைவர் ராஜன் ஏற்பாடு செய்துள்ளார். இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக பிகேஆர் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், டான்ஸ்ரீ முகைதீன் யாசின், செமினி சட்டமன்ற தொகுதியின் பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர் முகமட் ஐமான் சைனால், சிலாங்கூர் மந்திரி புசார் அமிருடின் சஹாரி, உலு லாங்காட் நாடாளுமன்ற உறுப்பினர் ஹஜி ஹசானுடின் பின் முகமட் யூனோஸ் ஆகியோர் கலந்து கொள்வர்.

இந்த கலை நிகழ்ச்சியில் உள்ளூர் கலைஞர்களான ஓஜி தாஸ், சந்தேஸ், ஹெவோக் பிரதர்ஸ், மிலினியம் ஆர்ட்ஸ் நடன கலைஞர்கள் ஆகியோர் தங்களது படைப்புகளை வழங்கவிருக்கின்றனர்.

பல்வேறு அம்சங்களுடன் நடைபெறும் இந்தக் கலை நிகழ்ச்சிக்கு செமினி வட்டார பொது மக்கள் அனைவரும் திரளாக வந்துக் கலந்து கொண்டு ஆதரவும் ஒத்துழைப்பும் வழங்க வேண்டும் என ஏற்பாட்டுக் குழுவினர்கள் கேட்டுக் கொள்கின்றனர்.

spot_img

latest articles

explore more