காஜாங் பிப் 27-
காஜாங் நகராண்மைக் கழக உறுப்பினராக பாலமுரளி கோவிந்தராஜூ நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
நகராண்மைக் கழகத்தின் தலைவர் டத்தோ முகமட் சாயூத்தி பாக்கார் முன்னிலையில் அவர் பதவி உறுதி மொழி எடுத்துக்கொண்டார் .
தனது சேவையை கருதி இந்த பொறுப்பினை வழங்கி மாநில அரசாங்கத்திற்கும் பிகேஆர் கட்சியின் பொறுப்பாளர்கள் அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.

தம் மீது நம்பிக்கைக் கொண்டு இந்த பொறுப்பு வழங்கப்பட்டுள்ளதால் மக்களின் தேவைகளை அறிந்து சேவையாற்றுவேன் என்று உறுதி அளித்தார்
மேலும் தன்னை செமினி வட்டாரத்தை கண்காணிக்கும் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளதால் அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் செமினி சட்டமன்ற இடைத்தேர்தலில் நம்பிக்கை கூட்டணி வெற்றிப் பெற கடுமையாக உழைக்கவிருப்பதாக கூறினார்.
இவரின் நியமனம் குறித்து கருத்துரைத்த உலு லங்காட் பிகேஆர் தொகுதி தலைவர் எம் புனேந்திரன் மற்றும் தொகுதி இளைஞர் மற்றும் மகளிர் பிரிவினர் பாலமுரளிக்கு வாழ்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.



