சனிக்கிழமை, மே 30, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > உலகம் > இரு போலீஸ்கார்கள் கடத்தப்பட்டு கொலை
உலகம்முதன்மைச் செய்திகள்

இரு போலீஸ்கார்கள் கடத்தப்பட்டு கொலை

நராதிவாத், பிப். 27-

போலீஸ்கார்கள் இருவர்  தேநீர் கடை ஒன்றில் இருந்து கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டனர்.

இச்சம்பவம் தென் எல்லையின் நராதிவாத் வட்டாரத்தில் நேற்று நடந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

பிரிவினைவாத இயக்கத்தைச் சேர்ந்த எண்மர் அந்தக் கடைக்குள் அத்துமீறி நுழைந்து அப்போலீஸ்கார்களைக் கடத்தியதாக லெஃடனென் சராயுத் கோச்சாவோங் கூறினார்.

 “போலீஸ்கார்களிடமிருந்து துப்பாக்கிகளைப் பறிமுதல் செய்த பின்னர் அவர்களை தங்களின் வாகனத்தில் ஏறும்படி கட்டாயப்படுத்தினர்” என்றார்.

” இவ்விருவரின் உடல்களும் சம்பவம் நடந்த இடத்தில் இருந்து சில மீட்டர் தொலைவில் கண்டெடுக்கப்பட்டன. கொலையுண்டவர்களில் ஒருவர் பௌத்த மதத்தைச் சேர்ந்தவர். மற்றொருவர் இஸ்லாமிய சமயத்தைச் சேர்ந்தவர்” என்றார் சராயுத்.

முஸ்லீம் போலீஸ்காரின் உடலைக் கண்டு அவரின் மனைவி துயரத்தில் அழுகையைக் கட்டுப்படுத்திக் கொண்டார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன