இலக்கை நோக்கி நமது பயணம்; மக்கள் பிரச்னை தீர்வுக் காணப்படும் -டாக்டர் சேவியர் ஜெயகுமார்

0
1

செமினி, பிப் 27-

மக்கள் எதிர்நோக்கி வரும் பிரச்னைகள் விரைவில் தீர்வு காணப்படும் என்று குடிநீர்,நிலம் மற்றும் இயற்கைவளத்துறை அமைச்சர் டாக்டர் சேவியர் ஜெயகுமார் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக இந்தியர்களின் அடையாள அட்டை பிரச்னை தீர்வு காண நடவடிக்கைகள் எடுக்கப்படும். அடையாள அட்டை பெறுவதற்கான சம்பந்தப்பட்ட ஆவணங்கள் அனைத்து சரியாக இருந்தால் மக்கள் அடையாள அட்டையை பெறுவதற்கு விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் சொன்னார்.

இதனிடையே, இந்தியர்களுக்கு குத்தகைகள் தற்போது கிடைக்கின்றது. அந்த குத்தகைகள் பெறுவதற்கான உரிமங்களும் ஆவணங்களும் சரியாக இருக்க வேண்டும்.

இன்று செமினி உணவகத்தில் நடைபெற்ற இலக்கை நோக்கி நமது பயணம் எனும் நிகழ்வில் கலந்து கொண்ட அவர் மக்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்ததோடு மக்கள் பிரச்னைகள் தீர்வுக் காணப்படுவதற்கான வழிமுறைகளையும் தெரிவித்தார்.

இதனிடையே, உலு லாங்காட்டில் கட்டப்படவிருக்கும் தங்கும் விடுதி பள்ளி குறித்து கூறுகையில், மாணவர்களின் கல்வியை கருத்தில் கொண்டு இந்தப் பள்ளி கட்டப்படபோவதாகவும் அனைத்து மாநிலங்களிலும் இந்தப் பள்ளி கட்டுவதற்கு பேச்சு வார்த்தை நடத்தப்போவதாகவும் டாக்டர் சேவியர் கூறினார்.

மேலும் 200க்கும் மேற்பட்ட இந்திய இளைஞர்களை சந்தித்த அவர், நமது இளைஞர்கள் சமுதாயத்தில் சிறந்த விளங்குவதற்கும் திட்டங்களை மேற்கொள்ளப்போவதாக அவர் சொன்னார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here