ஈப்போ பிப் 28-
நாட்டின் மேம்பாட்டிற்கு ஏற்ப இந்திய மகளிர்கள் பல துறைகளில் மேம்பாடு காணவேண்டும் என்று பத்துகாஜா நாடாளுமன்ற உறுப்பினர் வி் .சிவகுமார் கேட்டுக்கொண்டார் .
கடந்ந காலங்களுடன் ஒப்பிடும்போது இன்று இந்திய மகளிர்கள் பல்வேறு துறைகளில் மேம்பாடு கண்டு வருவது மகிழ்ச்சியை அளிக்கிறது.
அதே சமயத்தில் அரசாங்கமும் மகளிர்கள் தொடந்து பல துறைகளில் மேம்பாடு இலவச பயிற்சிகள் வழங்கி வருவதையும் அவர் சுட்டிக்காட்டிப் பேசினார் .

அந்த வகையில் மகளிர் மேம்பாட்டுத துறை அமைச்சு மகளிர்களுக்கு தையல், கணினி், சமயல் பயிற்சி், முக ஒப்பனை போன்ற பயிற்சிகள் வழங்கி வருகிறது. இந்த வாய்ப்புகளை கண்டறிந்து அதனை முறையே பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுகொண்டார்.
மலேசிய இந்திய மகளிர் இயக்கத்தின் ஏற்பாட்டில் இங்கு நடைபெற்ற மகளிர்களுக்கான கணினி பயிற்சியின் நிறைவு நிகழ்வில் கலந்துக்கொண்ட சிவகுமார் இவ்வாறு குறிப்பிட்டார்.
இந்த நிகழ்வில் 50 மகளிர்கள் கலந்துக்கொண்டனர். இதில் தனித்து வாழும் தாய்மார்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டது.
மலேசிய இந்திய மகளிர் இயக்கம் தொடர்ந்து மகளிர்களின் மேம்பாட்டிற்கு பல நிகழ்வுகளை நடத்தி வந்துள்ளது அதற்கு ஆதரவு வழங்கிய மகளிர் மேம்பாட்டு துறை அமைச்சுக்கு இயக்கத்தின் தலைவி முனைவர் தி். ராமநாயகம் நன்றியைத் தெரிவித்துக்கொண்டார்.

