ஈப்போ மார்ச் 2-
இங்கு ஜாலான் சுங்கை பாரியில் சுமார் 109 ஆண்டுகள் செயல்பட்டு வரும் தேவிஸ்ரீ மகா காளியம்மன் ஆலய நிலம் நிலை நிறுத்தவேண்டும் என்று ஆலய நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
கடந்த ஆண்டு 2010 இல் தேசிய முன்னணி அரசாங்கம் இந்த ஆலயத்திற்கென்று ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலத்தை மீட்டுக்கொள்ளும் எண்ணத்தை கைவிடவேண்டும் என்று ஆலயத் தலைவர் இருதயம் செபாஸ்தியன் வலியுறுத்தினார்.
கடந்த 2000ஆம் ஆண்டு முதல் ஆலயத்திற்கு நிரந்த இடத்தைப் பெற மேற்கொண்ட முயற்சியின் பலனால் மாநில ஆட்சிமன்றம் (எம்.எம்.கே) ஆலயத்திற்கு நிலத்தை அங்கிகரித்துள்ளது.

இதற்கான ஆதாரங்கள் அனைத்தும் ஆலய நிர்வாகத்திடம் உள்ளது.
மாநகர் மன்றத்திற்கு சொந்தமான இந்த ஆலய நிலத்தில் ஆலயத்தை எழுப்புவதற்கான எந்த தடையும் இல்லை என்று மாநகர் மன்றமும் அங்கிகார கடிதமும் உள்ளது.
இந்த நிலையில் புந்தோங் போலீஸ் முன் புறம் உள்ள இந்த ஆலயம் எழுந்துள்ள நிலம் உட்கொண்டுள்ள 37 ஏக்கர் நிலத்தில் நடப்பு அரசாங்கம் மேம்பாடு திட்டங்களை மேற்கொள்ளவிருப்பதாக கூறப்படுகிறது.
அந்த திட்டங்கள் மேற்வதற்கு எந்த ஆட்சேபனையும் இல்லை எனினும் அரசாங்கம் ஆலயத்திற்கு அங்கிகரித்த நிலத்தில் கையை வைக்கவேண்டாம் . அங்கிகரிக்கப்பட்ட நிலத்தை ஆலயத்திற்கே வழங்கவேண்டும் . நடப்பில் உள்ள இடத்திற்கு பதில் புதிய இடத்தை வழங்கக் கூடாது என்பதையும் கேட்டுக்கொண்டார் .
இந்த ஆலய நிலவிவகாரம் அடங்கி கோப்புகள் புந்தோங் சட்டமன்ற உறுப்பினர் ஆ. சிவசுப்பிரமணியத்திடம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வழங் கியதாகவும் அவர் குறிப்பிட்டார்.

