புதன்கிழமை, மே 27, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > சமூகம் > பிலோமினா கான்வெண்ட் தமிழ்ப்பள்ளியின் அனைத்துலக மகளிர் தினம் கொண்டாட்டம்
சமூகம்முதன்மைச் செய்திகள்

பிலோமினா கான்வெண்ட் தமிழ்ப்பள்ளியின் அனைத்துலக மகளிர் தினம் கொண்டாட்டம்

ஈப்போ, மார்ச் 9-

தேசிய வகை புனித பிலோமினா கான்வெண்ட் தமிழ்ப்பள்ளியில் அனைத்துலக மகளிர் தினம் பள்ளி அளவில் மிகச் சிறப்பாக  கொண்டாடப்பட்டது.

பள்ளியின் அனைத்து ஆசிரியர்களும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர். இப்பள்ளியின் தலைமையாசிரியை உட்பட மேலும் ஆறு ஆசிரியைகள், மிக சிறந்த பெண்மணிகளாக சிறப்பிக்கப்பட்டனர்.


தங்கள் பிள்ளைகளை உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு உயர் கல்விக்கூடங்களில் கல்வி கற்கும் அளவிற்கு கொண்டு சேர்த்த ஆசிரியைகள் தலைமையாசிரியையால் சிறப்பு செய்யப்பட்டனர்.

பின்னர்,பள்ளி ஆசிரியைகள் அனைவரும் ஒன்றிணைந்து தலைமையாசிரியைக்கு சிறப்பு செய்தனர்.

இந்நிகழ்வில் தலைமையாசிரியை உட்பட சிறப்பு செய்யப்பட்ட அனைத்து ஆசிரியர்களும் தங்கள் பிள்ளைகளின் தற்போதைய கல்விப்பயணத்தை மாணவர்களிடம் பகிர்ந்து கொண்டனர்.

One thought on “பிலோமினா கான்வெண்ட் தமிழ்ப்பள்ளியின் அனைத்துலக மகளிர் தினம் கொண்டாட்டம்

  1. MADESH.A

    நான் தமிழ் ஆசிரியராக பணியாற்றி வருகிறேன்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன