கம்பாரில் புதிய மருத்துவமனையை எழுப்ப தொடர் நடவடிக்கை! -சிவநேசன் தகவல்

0
7

கம்பார், மார்ச் 11-
மக்களின் தேவைகளை அறிந்து கம்பாரில் புதிய மருத்துவமனையை உருவாக்க தொடர் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக மாநில சுகாதார ஆட்சிக் குழு உறுப்பினர் ஏ.சிவநேசன் கூறினார்.

இந்த வட்டாரத்தில் சுமார் 250,000 உள்ளனர். அவர்களின் சுகாதார நடவடிக்கைக்கு இந்த மருத்துவமனையின் அவசியத்தை அவர் வலியுறுத்தினார்.

இந்த மருத்துவமனை 120 ஆண்டுகளுக்கு முன்பு நிர்மாணிக்கப்பட்டது. அதன் கட்டட சூழ்நிலைகள் தற்பொழுது பொறுத்தமாக இல்லை. இதர வசதிகளையும் கருத்தில் கொண்டு இந்த வட்டாரத்தில் மருத்துவமனையின் அவசியத்தை தெரிவித்தார் .

இன்று பிற்பகலில் இந்த மருத்துவமனைக்கு வருகை புரிந்த அவர்,  மருத்துவமனையை சுற்றிப் பாரத்தப் பின்னர் இதனை வலியுறுத்திய அவர் இங்கு புதிய மருத்துவமனையைக் கட்ட மூன்று இடங்களை கெரிஞ்சி சட்டமன்ற உறுப்பினர் சோங் சீ மின் அடையாளம் கண்டுள்ளார்.

இதில் பொறுத்தமான இடத்தை உறுதி செய்தப் பின்னர் நிதியமைச்சர் மற்றும் சுகாதார அமைச்சரின் கவனத்திற்கு நேரடியாக  கொண்டுச் செல்லப்படும்  என்றார்.

இங்கு கடந்த 2015 ஆம் ஆண்டு மருத்துவமனையை நிர்மாணிக்க அடையாளம் காணப்பட்ட  அந்த இடம் பொறுத்தம் இல்லை என்று ரத்து  செய்யப்பட்டுள்ளதை நினைவுக் கூர்ந்தார்.

ஆக, இந்த திட்டம் இங்கு நிறைவேற்றப்படவேண்டும். அதற்குறிய தொடர் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

அவர் மேலும் கூறுகையில், இங்கு இயங்கி வரும் யூத்தார் பல்கலைக் கழகம் மருத்துவமனையை நிர்மாணிக்கும் திட்டம் உள்ளது. அது தனியார் நிறுவனம் என்பதால்ல் வசதி குறைந்தோர்களுக்கு பயன் இல்லை என்பதையும் தெரிவித்தார்.