புதன்கிழமை, மே 27, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > சமூகம் > மதியழகனின் நிலங்களின் நெடுங்கணக்கு குறுநாவல்
சமூகம்முதன்மைச் செய்திகள்

மதியழகனின் நிலங்களின் நெடுங்கணக்கு குறுநாவல்

கோலாலம்பூர், மார்ச் 12- 

நம் நாட்டில் தொடர்ந்து சமூக கதைகள்தான் எழுதப்பட்டு வருகிறது. மிகவும் அபூர்வமாகவே மர்மம், துப்பறிதல், ஹாரர், த்ரில்லர் வகை கதைகள் எழுதப்படுகிறது. மிக நீண்ட இடைவெளிக்கு பிறகு மதியழகன் முனியாண்டி நிலங்களின் நெடுங்கணக்கு என்கிற தலைப்பில் த்ரில்லர் வகை குறுநாவல் ஒன்று எழுதி உள்ளார்.

இந்நூலின் அறிமுக விழா வரும் மார்ச் 16ஆம் தேதி சனிக்கிழமை மாலை 7 மணியளவில் மலாயா பல்கலைகழகத்தில் வெளியீடு காண்கிறது.

இக்குறுநாவலை திறனாய்வு செய்து வெளியிடுபவர் விரைவுரையாளர் முனைவர் செல்வஜோதி இராமலிங்கம் அவர்கள். பகாங் மாநில தமிழ் பிரிவு கல்வி துணை இயக்குனர் திரு சரவணன் இராமசந்திரன் புத்தகம் குறித்த விமர்சனம் செய்கிறார்.

பதிப்புரையை திருமதி யோகி சந்திருவும், இரண்டாவது புத்தக விமர்சனத்தை திரு கனகராஜாவும் செய்கின்றனர்.

சரித்திர ஆராய்ச்சிக்காக சுவிட்சர்லாந்தில் இருந்து மலேசியா வரும் செல்லதுரை என்கிற ஆராய்ச்சியாளர் ஒருநாள் காணாமல் போய்விடுகிறார். எங்கு தேடியும் கிடைக்கவில்லை. இருபது வருடங்கள் கழித்து காணாமல் போன ஆய்வாளர் செல்லதுரையைத் தேடிக் கொண்டு ஒரு இளம் வழக்கறிஞர் புறப்படுகிறார். செல்லதுரையை தேடும் நடவடிக்கையில் அந்த இளம் வழக்கறிஞர் சந்திக்கும் இன்னல்கள், தடங்கல்கள், ஆபத்துகள் என கதை கடந்து செல்கிறது. இந்த கதை முழுக்க முழுக்க மலேசிய மண் சார்ந்து எழுதப்பட்ட கதை.

ஒவ்வொரு மண்ணுக்கு பின்னாடியும் ஒரு கதை உண்டு. ஒவ்வொரு நிலத்துக்கு பின்னாடியும் ஒரு கதை உண்டு. அந்த கதைகள் நீண்ட கணக்கு கொண்டது. ஒவ்வொரு நிலத்துக்கும் ஒரு வரலாறு உண்டு. ஆயிரம் ரெண்டாயிரம் வருசமாக இந்த வரலாறுகள் தொடர்ந்து வருகிறது. அந்த வகையில் மலேசியாவில் உள்ள ஒவ்வொரு நிலத்துக்கும் ஒரு நீண்ட நெடிய வரலாறு உண்டு. அந்த வரலாறு குறித்து இந்த கதை பேசுகிறது என்று இந்த நூலின் தலைப்பு குறித்து நூலாசிரியர் மதியழகன் விளக்கம் கொடுத்தார்.

மதியழகன் சில ஆண்டுகளாக முகநூல், வலைப்பக்களில் தொடர்ந்து கதைகள், கட்டுரைகள் எழுதி வருகிறார். பல நீண்ட அரசியல் கட்டுரைகள் எழுதியவர். இவர் ஒரு அறிமுக எழுத்தாளர் ஆவார். நிலங்களின் நெடுங்கணக்கு இவரின் முதல் நூல். வாசிக்கும் ஆர்வமுள்ளவர்கள் இந்நூல் அறிமுக விழாவில் கலந்து கொண்டு பயன் பெறலாம்.

இந்த நூல் அறிமுக விழா தொடர்பான மேல் விபரங்களுக்கு மதியழகன் 012-6387901 என்கிற எண்ணோடு தொடர்பு கொள்ளலாம்.

சிறந்த புத்தகங்களுக்கு நமது ஆதரவினை வழங்குவோம்.

One thought on “மதியழகனின் நிலங்களின் நெடுங்கணக்கு குறுநாவல்

  1. மகேந்திரமணி

    இந்நாவலின் சிற்சில பகுதிகளை புலனங்களின் வழி படித்து அதன் பால் ஈர்க்கப்பட்டேன் தம்பி மதியழகனின் பல அரசியல் கட்டுரைகள் ஆழமானவை, ஆய்வுக்குட்பட்டவை அவரின் எழுத்து நடை மிக சுவாரசியமாக இருக்கும். இந்நாவலும் மலேசிய எழுத்து உலகில் ஓர் புதிய அத்தியாயத்தை தொடங்கும் என எதிர்பார்க்கிறேன்…. வாழ்த்துகள்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன