வியாழக்கிழமை, நவம்பர் 21, 2019
அண்மையச் செய்திகள்
முகப்பு > கலை உலகம் > இந்தியன் 2 – ல் மாற்றம் – ரவிவர்மனுக்குப் பதில் புதிய ஒளிப்பதிவாளர் !
கலை உலகம்

இந்தியன் 2 – ல் மாற்றம் – ரவிவர்மனுக்குப் பதில் புதிய ஒளிப்பதிவாளர் !

கடந்த 22 ஆண்டுகளுக்கு முன்னா் கமல்ஹாசன், ஷங்கா் கூட்டணியில் வெளியானப் படம் இந்தியன். ஊழல், லஞ்சம் ஆகிய தளங்களை அடிப்படையாகக் கொண்டு வெளியான இப்படத்திற்கு தமிழகத்தில் அமோக வரவேற்பு கிடைத்தது. இப்படத்திற்கு பின்னா் கமல்ஹாசன், ஷங்கா் கூட்டணியில் எந்தவொரு படமும் வெளியாகவில்லை.

கடந்த ஜனவரி மாதம் இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கப்பட்டது. படப்பிடிப்பு ஆரம்பித்த வேகத்திலேயே சில நாட்களில் நிறுத்தப்பட்டது.

இந்த நிலையில் வரும் ஆகஸ்ட் 10ஆம் தேதி முதல் இந்த படத்தின் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கவிருப்பதாகவும், பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்தவுடன் கமல்ஹாசன் இந்த படத்தின் படப்பிடிப்பில் இணைந்து கொள்வார் என்றும் உறுதி செய்யப்பட்ட செய்திகள் வெளிவந்துள்ளது

இந்த நிலையில் இந்த படத்தின் ஒளிப்பதிவாளராக பணிபுரிய ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்த ரவிவர்மன் திடீரென இந்த படத்தில் இருந்து விலகியுள்ளார். அவருக்கு பதில் ரத்னவேல் இந்த படத்தின் ஒளிப்பதிவாளராக இணைந்துள்ளதாக செய்திகள் வந்துள்ளது. ரத்னவேல் ஏற்கனவே ஷங்கரின் ‘எந்திரன்’ படத்தில் ஒளிப்பதிவாளராக பணிபுரிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

கமல்ஹாசன், காஜல் அகர்வால், பிரியா பவானிசங்கர், ஐஸ்வர்யாராஜேஷ் உள்பட பலர் நடிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கவுள்ளார். இந்த படம் அடுத்த ஆண்டு தீபாவளிக்கு வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன