Homeசமூகம்மாவாரின் 8 சிறுநீர் சுத்திகரிப்பு மையங்கள் செயல்படத் தொடங்கின!

மாவாரின் 8 சிறுநீர் சுத்திகரிப்பு மையங்கள் செயல்படத் தொடங்கின!

சிரம்பான், ஆக. 1 –

என்.எஸ்.சி.எம்.எச். எனும் மருத்துவமனை புசாட் ஹிமோடைலசிஸ் மாவார் நடத்தி வந்த 11 சிறுநீர் சுத்திகரிப்பு மையங்களில் 8 மையங்களில் மருத்துவச் சேவையை தொடர்ந்து நடத்துவதற்கு அனுமதி கிடைத்துள்ளதாக என்.எஸ்.சி.எம்.எச். மருத்துவ மையத்தின் தலைவர் டத்தோ லீ தியான் ஹோக் தெரிவித்தார்.

நெகிரி செம்பிலான் மாநிலத்தில் பகாவ், கோலப்பிலா, லுக்கூட், மந்தின்,ரந்தாவ், சிலாங்கூரில் சிப்பாங், ஶ்ரீ கிம்காங்கான், கோலாலம்பூரில் சீ பூத்தோ ஆகிய இடங்களில் இந்த சிறுநீர் சுத்திகரிப்பு மையம் செயல்படுவதற்கு சுகாதார அமைச்சு அனுமதி வழங்கியுள்ளது.

மேலும் கிம்மாஸ், யோங் பெங் மற்றும் சபா தாவாவில் உள்ள இந்த மூன்று மையங்கள் செயல்பட அடுத்த வாரம் அனுமதி கிடைத்து விடுமென அவர் தெரிவித்தார்.

இந்த சிறுநீர் சுத்திகரிப்பு மையங்கள் திறந்ததால் 356 நோயாளிகள் பயனடைவர்கள். மேலும் உண்மையில் நிதி உதவித் தேவைப்படுவர்களும் பயனடைவர்கள் என டத்தோ லீ தியான் ஹோக் நம்பிக்கை தெரிவித்தார்.

நோயாளிகள் சிறந்த சேவையைப் பெறுவதற்கு மாதம் 2 இலட்சம் ரிங்கீட் ஒதுக்குவதாகத் தெரிவித்த அவர் தங்களிடம் 138 சிறுநீர் சுத்திகரிப்பு சாதனங்கள் இருபதாகவும் நோயாளிகளுக்கு சிறந்த சேவையை வழங்க முடியும் என்றார்.
படம் இ-மெயில்

spot_img

latest articles

explore more