Homeமலேசியாமலேசியர் என்ற உணர்வு மேலோங்க வேண்டும்! - டாக்டர் சேவியர் ஜெயக்குமார்

மலேசியர் என்ற உணர்வு மேலோங்க வேண்டும்! – டாக்டர் சேவியர் ஜெயக்குமார்

கோலாலம்பூர், ஆக 5-
உலக அரங்கில் மலேசியாவின் அடையாளத்தை தாங்கிப்பிடிக்கும் நமது ஒற்றுமை தொடர்ந்து நீடிக்க வேண்டும். அதோடு மலேசியர் என்ற உணர்வு நம்மிடையே மேலோங்க வேண்டும் என நீர் நிலம் இயற்கை வள அமைச்சர் டாக்டர் சேவியர் ஜெயக்குமார் கேட்டுக்கொண்டார்.

இவ்வாண்டுக்கான தேசிய தின கொண்டாட்டத்தின் தொடக்க விழாவில் பங்கேற்ற அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். மலேசியாவை நேசிப்போம் மலேசியாவின் சுத்தத்தைப் பேணுவோம் என்ற கருப்பொருளோடு கொண்டாடப்படும் இந்த தேசிய தினத்தில் நமது ஒற்றுமை பன்மடங்கு உயர வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

புதிய மலேசியா என்ற சிந்தனையின் கீழ் நாம் அனைவரும் மலேசியர்கள் என்ற ஒரே கோட்பாட்டின் கீழ் பயணிக்கின்றோம். பல்லின மக்களை வழியாக கொண்டிருந்தாலும் இனம் மதம் சமயம் என வேறுபாடுகள் இருந்தாலும் மலேசியர்கள் என்ற ஒரே அடையாளம் தான் நம்மை உலக அரங்கில் தலை நிமிர வைக்கிறது.

அந்த ஒற்றுமையை நாம் தொடர்ந்து பேணி காக்க வேண்டும். சுதந்திர மாதம் என்பது மலேசிய வரலாற்றில் மிக முக்கியமான நாள். இந்த மாதத்தை அனைத்து மலேசியர்களும் ஒன்றாக கொண்டாடி மகிழ வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

spot_img

latest articles

explore more