வியாழக்கிழமை, நவம்பர் 21, 2019
அண்மையச் செய்திகள்
முகப்பு > கலை உலகம் > தரத்தின் உச்சம் நாங்கள்தான்; மீண்டும் உறுதிப்படுத்தியது மோஜோ
கலை உலகம்முதன்மைச் செய்திகள்

தரத்தின் உச்சம் நாங்கள்தான்; மீண்டும் உறுதிப்படுத்தியது மோஜோ

கோலாலம்பூர், ஆக 5-
தரமான நிகழ்ச்சிகளைப் படைத்து மலேசிய இசை ரசிகர்கள் மத்தியில் தனக்கென தனி அடையாளத்தை ஏற்படுத்தி இருக்கும் மோஜோ ப்ராஜெக்ட் ஏற்பாடு செய்த ரேட்ரோ ரஹ்மான் 2.0 இம்முறையும் சிறந்த வெற்றியை பதிவு செய்தது.

பிரபல பின்னணி பாடகர்களான ஸ்ரீனிவாஸ், மனோ, ஹரிணி, சாதனா சர்கம் ஆகியோரோடு இளம் பாடகரான சத்திய பிரகாஷும் இணைந்து மலேசிய ரசிகர்களை இசை கடலில் ஆழ்த்தினர்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த முத்து திரைப்படத்தின் தொடக்க பாடலான ஒருவன் ஒருவன் முதலாளி என்ற பாடலை மனுவோடு இணைந்து சத்திய பிரகாஷ் பாடி ரேட்ரோ ரஹ்மான் 2.0 தொடக்கி வைத்தார்.

 

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் இசைக்கோர்வையை வழங்கும் மணி&பேண்ட் குழுவினர் இந்த நிகழ்ச்சிக்கு பின்னணி இசையை வழங்கினார்கள். அந்தக் குழுவில் இடம் பெற்றுள்ள கார்த்திக்கிற்கு மலேசிய ரசிகர்கள் குறிப்பாக பெண் ரசிகர்கள் அமோக வரவேற்பை வழங்கி கூச்சலிட்டு தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

கையில் மிதக்கும் கனவா நீ என்ற பாடலோடு இந்த நிகழ்ச்சியில் தோன்றினார் ஸ்ரீநிவாஸ். அதேபோல் ஹரிணி பாடிய பாடல்களும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வேளையில் சாதனா சர்கம் குரலில் ஒலித்த வெண்ணிலவே வெண்ணிலவே, ஸ்நேகிதனே போன்ற பாடல்களை ரசிகர்களும் முணுமுணுத்தனர்.

இந்த நிகழ்ச்சியின் மிக முத்தாய்ப்பு அங்கமாக அணில் ஸ்ரீனிவாசன் மேட்லி தொகுப்பு அனைவரையும் வெகுவாக கவர்ந்தது. இதில் அவர் பியானோ வாசிக்க அரங்கில் கூடியிருந்த இரண்டாயிரத்திற்கும் அதிகமான ரசிகர்கள் பூவுக்குள் ஒளிந்திருக்கும் கனிக்கூட்டம் அதிசயம் முஸ்தபா முஸ்தபா போன்ற பாடல்களைப் பாடினார்கள். இதைப்பார்த்த மனோ, ஸ்ரீனிவாஸ் உட்பட அனைவரும் அதிர்ச்சியில் உறைந்தனர்.

மிகச்சிறந்த நிகழ்ச்சியின் மூலம் மோஜோ ப்ராஜெக்ட் மீண்டும் தமது தரத்தை உறுதி செய்திருக்கின்றது. இண்டிபெண்டன்ட் life in concert நவம்பர் 9ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

இதில் வீணை கலைஞரான ராஜேஷ் வைத்யா அவரது மகள் மாளவிகா சூப்பர் சிங்கர் புகழ் ரக்ஷிதா ஆகியோர் கலந்து கொள்ளும் வேளையில் சூப்பர் சிங்கர் புகழ் நிகில் தனது குழுவினருடன் பங்கேற்கிறார். அவரோடு ஏ.ஆர்.ரகுமானின் ஆஸ்தான பாடகியாக வலம் வரும் சக்திஸ்ரீ கோபாலன் இதில் பங்கு பெறுகின்றார். மிக முக்கியமாக மலேசிய ரசிகர்களை தொடர்ந்து மகிழ்ச்சிப்படுத்தும் ஹரிசரனும் இதில் கலந்து கொள்கின்றார் அதோடு ஸ்வேதா மோகன் இதில் இணைவதால் மிகப்பெரிய எதிர்பார்ப்பை இந்த நிகழ்ச்சி உண்டாக்கியுள்ளது.

இந்த நிகழ்ச்சியை டிஎச்ஆர் ராகா புகழ் அன்புள்ள மாறனும் நாடறிந்த நிகழ்ச்சி தொகுப்பாளரான சுஸ்மிதாவும் சிறப்பான முறையில் வழிநடத்தினர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன