வியாழக்கிழமை, நவம்பர் 21, 2019
அண்மையச் செய்திகள்
முகப்பு > அரசியல் > இந்தியர்களின் பாரம்பரிய தொழில்கள் பாதாளத்தில்? கேசவன் கந்தசாமி காட்டம்
அரசியல்முதன்மைச் செய்திகள்

இந்தியர்களின் பாரம்பரிய தொழில்கள் பாதாளத்தில்? கேசவன் கந்தசாமி காட்டம்

கோலாலம்பூர் ஆகஸ்ட் 11-

சலவைத்தொழில் ஜவுளிக்கடை முடி திருத்தும் நிலையம் ஒரு கொள்ள ஆகிய நான்கு துறைகளுக்கு 20 21 ஆம் ஆண்டு வரை அந்நியத் தொழிலாளர்களை தருவிப்பதற்கு உள்துறை அமைச்சு தடை விதித்துள்ளது. இந்த நடவடிக்கையை மலேசிய இந்திய காங்கிரசின் இளைஞர் பகுதி வன்மையாக கண்டித்துள்ளது.

தேசிய முன்னணி ஆட்சி காலத்தில் 9 துறைகளுக்கு அந்நியத் தொழிலாளர்களை தருவிக்க முடியாது என உள்துறை அமைச்சு கூறியிருந்தது. இருப்பினும் ஒரு தொழிலாளி நாடு திரும்பும் போது மற்றொரு தொழிலாளியை மாற்றுத் தொழிலாளியாகத் தருவித்துக் கொள்வதற்கு அரசாங்கம் அனுமதி வழங்கியிருந்தது.

இந்த விவகாரத்திற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என மக்கள் விரும்பினார்கள். குறிப்பாக இத் தொழில்களை செய்து வந்த தொழில் முனைவர்கள் இப்பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காணப்படும் வேணும் என எதிர்பார்த்த நிலையில் 2021 ஆம் ஆண்டு வரை தொடர்ந்து இந்த 4 துறைகளுக்கு அந்நியத் தொழிலாளர்களை தருவிக்க முடியாது என அரசு கூறியிருப்பது அவர்களுக்கு மிகப் பெரிய மன அழுத்தத்தை தந்துள்ளது என மலேசிய இந்திய காங்கிரசின் இளைஞர் பகுதியின் பொருளாளர் கேசவன் கந்தசாமி தனது அறிக்கையில் குறிப்பிட்டார்.

மலேசியர்கள் இத்தொழில்களில் பணியமர்த்தப்பட வேண்டும் என அரசாங்கத்தின் நிலைப்பாட்டை நாம் அனைவரும் வரவேற்கின்றோம். இளைஞர் பகுதியைப் பொறுத்தவரை இம்மாதிரியான தொழில்களில் அதிகமான இளைஞர்கள் சேர்க்கப்பட வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம். ஆனால் இத் தொழில்களை செய்வதற்கு மலேசியர்கள் விருப்பம் காட்டுவதில்லை என்பது தான் நிசப்தமான உண்மை என கேசவன் குறிப்பிட்டார்.

நல்ல வருமானத்தோடு சிறந்த சலுகைகளையும் வழங்குவதாக முதலாளிமார்கள் அறிவித்த நிலையில் மலேசியர்கள் இத்தொழிலுக்கு வருவதற்கு தயங்குகிறார்கள். குறிப்பாக இந்த பாரம்பரிய தொழில்களை செய்வதற்கு இதுநாள்வரை இந்தியாவின் மனித வளத்தை தான் நான் நம்பி இருக்கின்றோம்.

அந்நியத் தொழிலாளர்களை தருவிக்க முடியாது என்றால் நமது பொருளாதார பலம் பலவீனம் அடையும் என்பதை அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். அல்லது பணியாளர்கள் பற்றாக்குறை ஏற்படும் தொழில் துறைகளுக்கு ஆள் பலத்தைக் கொண்டு சேர்ப்பதில் மனிதவள அமைச்சு எம்மாதிரியான நடவடிக்கையை முன்னெடுத்துள்ளது என்ற கேள்வியையும் அவர் முன்வைத்திருக்கிறார்.

உள்ளூர் பணியாளர்களை வேலைக்கு அமர்த்துவதற்கு முதலாளிகள் தயாராக இருக்கின்றார்கள். உங்களுக்கான ஆள் பலத்தை தருவதற்கு மனிதவள அமைச்சு தயாரா? என கேசவன் சவால் விடுத்தார்.

ஒரு முடிவை எடுப்பதற்கு முன்னதாக அந்தத் துறைகளைச் சார்ந்தவர்கள் இடம் விளக்கம் கேட்டு இருக்க வேண்டும். அதைவிடுத்து உடனடியாக செயல் திட்டங்களை முன்னெடுப்பது அனைத்து நிலைகளிலும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை அனைவரும் உணர்ந்து கொள்ள வேண்டும் என அவர் கூறினார்.

இது இந்தியர்கள் சார்ந்த துறை என்றால் அதற்கு மனிதவள அமைச்சர் குணசேகரன் கேள்வி எழுப்பியிருக்க வேண்டும். ஆனால் அவர் அமைதியாக இருப்பது அமைச்சரவையில் இந்திய பிரதிநிதித்துவம் இருக்கிறதா என்ற என்ற கேள்வியை எழச்செய்து உள்ளது.

மெட்ரிகுலேஷன் விவகாரத்தில் தீர்வு காணப்படவில்லை, மித்ரா நிதி குறித்த விளக்கமும் வழங்கப்படவில்லை இப்போது இந்த விவகாரத்திற்கும் இவர்கள் அமைதியாக இருந்து விடுவார்கள் என்றுதான் தமக்கு தோன்றுவதாக கேசவன் கந்தசாமி குறிப்பிட்டார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன