ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 19, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > முதன்மைச் செய்திகள் > குடல் கசிவின் காரணமாக நோரா ஆன் மரணம் !
முதன்மைச் செய்திகள்

குடல் கசிவின் காரணமாக நோரா ஆன் மரணம் !

சிரம்பான், ஆகஸ்ட்.15-

குடல் கசிவின் காரணமாக அயர்லாந்து நாட்டைச் சேர்ந்த நோரா ஆன் மரணமடைந்தார் என காவல்துறை அறிவித்துள்ளது. புதன்கிழமை நடத்தப்பட்ட பிரேத பரிசோதனையின் வழி, நோரா ஆன்னின் மரணத்துக்கான காரணம் கண்டறியப்பட்டுள்ளதாக நெகிரி செம்பிலான் காவல்துறைத் தலைவர் முஹமாட் மாட் யூசோப் தெரிவித்துள்ளார்.

15 வயதுடைய நோரா ஆன்னின் உடல் செவ்வாய்கிழமை மாலையில்  கண்டுபிடிக்கப்பட்டது.  நோரா குறைந்தது இரண்டிலிருந்து மூன்று நாட்களுக்கு முன்னர்தான் இறந்திருக்கக் ம்கூடும், நான்கு நட்களுக்கு மேல் அல்ல என்று பிரேத பரிசோதனை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக முஹமாட் மாட் யூசோப் கூறினார்.

சிரம்பானில் உள்ள நெகிரி செம்பிலான் காவல்துறை தலைமையகத்தில் இன்று வியாழக்கிழமை நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில்முஹமாட் இவ்வாறு கூறினார்.  நீண்ட நாட்களாக உணவு இல்லாத நிலையில் நீண்ட கால அழுத்தம் காரணத்தினால் குடல் கசிவு ஏற்பட்டிருக்கக் கூடும் என்று அவர் கூறினார்.  ஆனால், நோரா ஆன் கற்பழிக்கப்பட்டிருக்கக் கூடிய சாத்தியத்தை அவர் முற்றாக மறுத்திருக்கின்றார்.

சிரம்பானில் உள்ள ஒரு தங்கும் விடுதியின் அறையிலிருந்து, இம்மாதம் 4-ஆம் தேதி நோரா ஆன் காணாமல் போனதாக புகார் செய்யப்பட்டிருந்தது.  அதன் பின்னர் தேடுதல் நடவடிக்கை தொடரப்பட்டது.  இறுதியில், 10 நாட்களுக்குப் பின்னர் அவரின் உடல், அந்தத் தங்கும் விடுதியிலிருந்து 2 .5 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும் ஆற்றுக்கு அருகில் நேற்று புதன்கிழமை மாலையில் கண்டெடுக்கப்பட்டது.  கற்றல் குறைப்பாடு கொண்டுள்ள நோரா ஆன், விடுமுறைக்காக தமது பெற்றோருடன் இம்மாதம் மூன்றாம் தேதி மலேசியா வந்திருந்தார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன