Homeசமூகம்டத்தோஸ்ரீ டாக்டர் ஜெயந்திரன் காலமானார்

டத்தோஸ்ரீ டாக்டர் ஜெயந்திரன் காலமானார்

கோலாலம்பூர், ஆக 19-

சுகாதார அமைச்சின் முன்னாள் துணைத் தலைமை இயக்குநர் டத்தோஸ்ரீ டாக்டர் ஜெயந்திரன் சின்னதுரை இன்று விடியற்காலை காலமானார்.

சுகாதார அமைச்சில் 38 ஆண்டுகாலம் பணியாற்றியிருக்கும் டத்தோஸ்ரீ டாக்டர் ஜெயந்திரன் (வயது 64) இன்று கம்போங் டத்தோ கெராமாட்டில் உள்ள  வீட்டில் திடீரென மயங்கி விழுந்தார். அதனை தொடர்ந்து அவர் கோலாலம்பூர் பொது மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டார். எனினும், விடியற்காலை 2.00 மணியளவில் அவர் இறந்ததாக அறிவிக்கப்பட்டது.

கோலாலம்பூர் மருத்துவமனையின் மூத்த மருத்துவ ஆலோசகரான டாக்டர் ஜெயந்திரன் கடந்த ஆண்டு மே 13ஆம் தேதி ஓய்வு பெற்றார்.

சுகாதார அமைச்சில் பணியாற்றிய காலத்தில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வருவதில் டாக்டர் ஜெயந்திரன் முக்கிய பங்காற்றியிருக்கிறார். இது தவிர, தமிழ்ப்பள்ளிகளைச் சேர்ந்த வசதி குறைந்த மாணவர்களுக்கு உதவும் நோக்கத்தில் மைநாடி அறநிறுவனத்தையும் உருவாக்கி அதன் மூலம் சமூக பணிகளிலும் ஈடுப்பட்டு வந்தார்.

இதனிடையே, டாக்டர் ஜெயந்திரனின் மரணம் குறித்து பலர் தங்களது அதிர்ச்சியை தெரிவித்துள்ளனர். துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ வான் அசிசா மற்றும் பிகேஆர் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் ஆகியோரும் டாக்டர் ஜெயந்திரனின் குடும்பத்திற்கு தங்களது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொண்டனர்.

டாக்டர் ஜெயந்திரன் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக அறிமுகமான நல்ல நண்பராக திகழ்ந்தார் என மலேசிய மருத்துவ சங்கத்தின் தலைவரான டாக்டர் ஞானபாஸ்கரன் தனது அனுதாப செய்தியில் கூறியிருக்கிறார்.

கோலாலம்பூர் மருத்துவமனையில் பல இளம் மருத்துவர்களுக்கு அவர் நல்ல ஆலோசகராகவும் உதவியாளராகவும் பணியாற்றி வந்திருப்பதையும் டாக்டர் ஞானபாஸ்கரன் கூறினார்.

spot_img

latest articles

explore more