Homeகுற்றவியல்நாடு முழுவதிலும் ஜாகிர் நாயக் உரையாற்றுவதற்குத் தடை!

நாடு முழுவதிலும் ஜாகிர் நாயக் உரையாற்றுவதற்குத் தடை!

கோலாலம்பூர் ஆக. 20-

சமய போதகர் ஜாகிர் நாயக் நாடு முழுவதிலும் உரையாற்றுவதற்குத் தடை வைக்கப்பட்டிருப்பதாகப் புக்கிட் அமான் போலீஸ் தலைமையகம் அறிவித்துள்ளது. மலேசியாவில் உள்ள ஒவ்வொரு மாநிலத்திலும் பொதுமக்களிடையே உரையாற்றுவதற்கு ஜாகிர் நாயக்கிற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக அரச மலேசிய போலீஸ படையின் தொழில் தொடர்பு பிரிவின் தலைவர் உயர் துணை ஆணையர் டத்தோ அஸ்மாவதி அகமட் இதனை உறுதிப்படுத்தினார்.

நாடு முழுவதிலும் உள்ள மாநில போலீஸ் தலைவர்களுக்கு இந்தத் தடை குறித்த சுற்றறிக்கை அனுப்பப்பட்ட தகவல் கசிந்ததைத் தொடர்ந்து அவர் இந்தத் தகவலை தெரிவித்தார். அனைத்துப் போலீஸ் மாநில தலைமையகத்திற்கு இதுகுறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தேசிய பாதுகாப்பு நலன் மற்றும் இன ஐக்கியத்தைத் தொடர்ந்து நிலைநாட்டுவதற்கும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக அஸ்மாவதி தெரிவித்தார்.  அண்மையில் இன துவேசம் பாணியில் அவரது உரை அமைந்ததைத் தொடர்ந்து மலாக்கா, ஜோகூர்,சிலாங்கூர், பினாங்கு, கெடா போலீஸ் ஆகிய 7 மாநிலங்கள் ஜாகிர் நாயக் பொது நிகழ்வுகளில் உரையாற்றுவதற்குத் தடை விதித்தன.

அமைதியை மீறும் வகையில் அவதூறு நோக்கத்தோடு உரையாற்றியதன் தொடர்பில் குற்றவியல் சட்டம் 504 விதியின் கீழ் ஜாகிர் நாயக் மீது விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. சட்டவிரோத பணப் பரிமாற்றம் மற்றும் சொற்பொழிவு மூலம்  தீவிரவாதத்தைத் தூண்டியதாக ஜாகிர் நாயக் மீது இந்திய அரசாங்கம் குற்றம் சாட்டியுள்ளது. இதனால் 2016 ஆம் ஆண்டு முதல் அவரை இந்திய அரசாங்கம் தேடி வருகிறது.

அண்மையில் கோத்தா பாருவில் அவர் மலேசிய இந்துக்கள் மற்றும் , சீனர்களுக்கு அவதூறு ஏற்படுத்தும் வகையில் உரையாற்றிய கூறப்பட்டது. இதனைத் தொடர்ந்து அந்தச் சர்ச்சைக்குரிய சமய போதகரை நாட்டிலிருந்து வெளியேற்றும்படி கோரிக்கை அதிகரித்தது.

spot_img

latest articles

explore more