சென்னை : நடிகர் பாலாசிங் (67) உடல்நலக்குறைவால் காலமானார். சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி காலமானார்.

 இவர் நடிகர் நாசர் எழுதி இயக்கி நடித்த அவதாரம் படம் மூலம் சினிமாவிற்கு வந்தவர். இந்தியன், ராசி, புதுப்பேட்டை, என்.ஜி.கே, மகாமுனி போன்ற படங்களில் நடித்தவர். மலையாளத்தில் அறிமுகம் ஆனாலும் குணச்சித்திர நடிகர் , வில்லன் கதாபாத்திரங்களில் நடித்து புகழ்பெற்றார் பாலாசிங்