சனிக்கிழமை, ஜனவரி 25, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > குற்றவியல் > சுபாங் ஜெயா ஆலய கலவரம்; தனிநபர்களின் புகைப்படங்கள் மீண்டும் வெளியிடப்படும்!
குற்றவியல்முதன்மைச் செய்திகள்

சுபாங் ஜெயா ஆலய கலவரம்; தனிநபர்களின் புகைப்படங்கள் மீண்டும் வெளியிடப்படும்!

கோலாலம்பூர், நவ.28-

கடந்தாண்டு சிலாங்கூர், சுபாங் ஜெயா, யூ.எஸ்.ஜே 25-லுள்ள ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தின் முன்புறம் இரவில் நிகழ்ந்த கலவரம் தொடர்பில், அங்கு இருந்ததாக கூறப்படுபவர்களின் புகைப்படங்களைப் போலீஸ் மீண்டும் வெளியிடவுள்ளது.

அவர்களை அடையாளும் காணும் முயற்சியில், சிலாங்கூர் மற்றும் புக்கிட் அமான் போலீஸ் தீவிரம் காட்டி வருவதாக புக்கிட் அமான் குற்றப்புலனாய்வு துறையின் இயக்குநர் ஹுசீர் முஹம்மட் தெரிவித்துள்ளார்.

அந்த ஆலய கலவரத்தினால் உயிரிழந்த தீயணைப்பு வீரர் முஹம்மட் அடிப் முஹம்மட் காசிம் தொடர்பான மரண விசாரணையில், அந்த நபர்களால் உதவ முடிய என நம்பப்படுவதாக, புக்கிட் அமானின் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியுள்ளார்.

முஹம்மட் அடிப்பின் மரண விசாரணையில், இரண்டு அல்லது அதற்கும் கூடுதலான அடையாளம் தெரியாத நபர்களின் குற்றச்செயலால்தான் அவர் உயிரிழந்ததாக, கொரெனர் ரோஃபியா முஹம்மட், கடந்த செப்டம்பர் மாதம் 27ஆம் தேதி தீர்ப்பளித்தார்.

கடந்தாண்டு நவம்பர் 27ஆம் தேதி நிகழ்ந்த அக்கலவரத்தில், சுபாங் ஜெயா தீயணைப்பு மற்றும் மீட்பு துறையைச் சேர்ந்த முஹம்மட் அடிப் கடுமையான காயங்களுக்கு இலக்கானார்.

21 நாட்கள் உயிருக்கு போராடிவந்த அவர், டிசம்பர் 17ஆம் தேதி தேசிய இருதய கழகத்தில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன