செவ்வாய்க்கிழமை, ஜனவரி 21, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > மற்றவை > தேசியக் கொடியைத் தெரியாதவர்கள் தேசத்துரோகிகள்! மஸ்லீ மாலிக் சாடல்
மற்றவைமுதன்மைச் செய்திகள்

தேசியக் கொடியைத் தெரியாதவர்கள் தேசத்துரோகிகள்! மஸ்லீ மாலிக் சாடல்

கோலாலம்பூர், நவ.28-

தேசியக் கொடியைத் தெரியாத மக்களை முட்டாள்கள், அறியாமையில் உள்ளவர்கள் என வகைப்படுத்த முடியாது. மாறாக, அவர்கள் தேசத்துரோகிகள் என கல்வியமைச்சர் மஸ்லீ மாலிக் தெரிவித்துள்ளார்.

அண்மையில், கூடை பந்து போட்டியில், ஐந்து நட்சத்திரம் மட்டுமே இடம்பெற்றிருந்த தேசிய கொடி காட்டப்பட்ட விவகாரம் குறித்து, அவர் அக்கூற்றை முன்வைத்துள்ளார்.

தம்மைப் பொறுத்த வரையில் தேசிய கொடியைத் தெரியாது என கூறும் மலேசியர்களின் அறியாமையை மன்னிக்க முடியாத ஒன்றாக தாம் கருதுவதாக, மஸ்லீ மாலிக் கூறியுள்ளார்.

முன்னதாக, நாடு சுதந்திரம் அடைந்து 62 ஆண்டுகள் ஆன நிலையில், தேசிய கொடியை இன்னும் தெரியாதவர்கள் இருப்பதாகவும் நாட்டின் கல்வி முறையில் அழுத்தம் வழங்கப்பட வேண்டும் எனவும் பாஸ் கட்சியைச் சேர்ந்த தானா மேரா நாடாளுமன்ற உறுப்பினரான இக்மால் ஹிஷாம் அப்துல் அசிஸ் கூறியிருந்தது குறித்து மஸ்லீ மாலிக் கருத்துரைத்தார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன