ஜோர்ஜ்டவுன், நவ.29-

தேசிய மொழியில் ஜாவி ஒரு பகுதி என்பதால், தமிழ், சீனப்பள்ளிகளில் காட் எழுத்துகளை போதிக்கலாம் என இங்குள்ள உயர்நீதிமன்றம் வியாழக்கிழமை தீர்ப்பளித்துள்ளது.

அந்த எழுத்துகளைப் போதிப்பதன் வாயிலாக, இஸ்லாமிய ஆய்வு வகுப்புகளைப் போன்று, இஸ்லாமிய கருத்துகள், இதர சமய மாணவர்களிடையே பரப்பப்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கெராக்கான் கட்சி நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தது.

ஆயினும், உயர்நீதிமன்ற நீதித்துறை ஆணையரான அமார்ஜிட் செர்ஜித் சிங், அதனை நிராகரித்ததோடு, தனது தீர்ப்பில் அக்கூற்றை முன்வைத்தார்.

ஜாவி வகுப்புகளை அமல்படுத்துவது, 1963 / 1967 தேசிய மொழி சட்டம் மற்றும் கூட்டரசு அரசியலைப்பிற்கு முரணாக இல்லை எனவும் அமார்ஜிட் செர்ஜித் சிங் குறிப்பிட்டார்.