சனிக்கிழமை, ஜனவரி 25, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > மற்றவை > தமிழ்ப்பள்ளிகளில் ஜாவி; அரசாங்கத்தின் முடிவிற்கு மதிப்பளிப்பீர்! -முஜாஹிட் யூசோப்
மற்றவைமுதன்மைச் செய்திகள்

தமிழ்ப்பள்ளிகளில் ஜாவி; அரசாங்கத்தின் முடிவிற்கு மதிப்பளிப்பீர்! -முஜாஹிட் யூசோப்

கோலாலம்பூர், நவ.30-

தமிழ், சீன பள்ளிகளில் ஜாவி (காட்) எழுத்துகளைப் போதிப்பதற்கு நீதிமன்றம் அனுமதித்துள்ள நிலையில், அரசாங்கத்தின் முடிவிற்கு அனைத்து தரப்பினரும் மதிப்பளிக்க வேண்டுமென பிரதமர்துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ டாக்டர் முஜாஹிட் யூசோப் வலியுறுத்தியுள்ளார்.

முன்னதாக, நாடு முழுவதிலும் உள்ள தமிழ், சீன பள்ளிகளில், காட் எழுத்துகளை போதிப்பதற்கு அனுமதிக்கக்கூடாது என வலியுறுத்தி கெராக்கான் கட்சி கொண்டு வந்த வழக்கை, பினாங்கு உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது குறித்து முஜாஹிட் யூசோப் கருத்துரைத்துள்ளார்.

கெராக்கான் கொண்டு வந்த அவ்வழக்கில், அப்பள்ளிகளில் காட் எழுத்துகளைப் போதிப்பதற்கு கல்வியமைச்சிற்கும் அரசாங்கத்திற்கும் உரிமை உள்ளது முடிவு செய்யப்பட்டுள்ளது. எனவே, அம்முடிவிற்கு நாம் கட்டுப்பட வேண்டுமென அவர் கூறியுள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன