ஆர்.எஸ்.என். ராயரின் நெற்றி திருநீற்றை இழிவுபடுத்திய தே.மு. எம்பி

0
14

கோலாலம்பூர், டிச.3-

மறைந்த மலாயா கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் தலைவர் சின் பெங்கின் சாம்பலுக்கும் பக்காத்தான் ஹாராப்பானின் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.எஸ்.என் ராயரின் நெற்றியிலுள்ள திருநீற்றுக்கும் தொடர்பு இருக்கின்றதா என தேசிய முன்னணியின் பாசிர் சாலாக் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோஸ்ரீ தாஜூடின் அப்துல் ரஹ்மான் மக்களவையில் கேள்வியெழுப்பியது பெரும் சர்ச்சையானது.

 

தாஜூடினின் அக்கூற்றைத் தொடர்ந்து இரண்டு நாட்கள் அவர் மக்களவையில் கலந்துக்கொள்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.