Homeகலை உலகம்வெளியேறினார் ரைசா! மீண்டும் ஆர்த்தி?

வெளியேறினார் ரைசா! மீண்டும் ஆர்த்தி?

 சென்னை, ஆக 28-

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தற்போது முதல்நிலை வகிப்பது பிக் பாஸ். மக்கள் மனதில் நிரந்தர இடம் பிடித்திருந்த ஓவியா பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய பிறகு, பிக் பாஸ் ரசிகர்களின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்தது, இருப்பினும் உலக நாயகன் கமல்ஹாசனுக்கான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் ரசிகர்கள் இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து பார்த்து வருகிறார்கள்.

இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை ரைசா வெளியேற்றப்பட்டார். அவரை மட்டும் தனி அறைக்கு அழைத்து பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேற வேண்டுமென கூறிவிட்டார். சக போட்டியாளர்களிடம் எதுவும் சொல்லாமல், ரைசா பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார். பின்னர் கமல்ஹாசனை அவர் சந்தித்தப்போது, ரைசா தூங்கும் போதெல்லம் குரைத்த நாய் உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பப்படுவதாகக் கூறினார். இதனால் அரங்கமே கரவொலியில் அதிர்ந்தது.

பின்னர் பிக் பாஸ் வீட்டில் நினைவலைகளை ரைசா பகிர்ந்துக் கொண்டார். பின்னர் பிக் பாஸ் வீட்டின் வெற்றியாளர் யார் என ரைசாவிடம் கேட்டப்போது, கணேஷ் வெற்றி பெறுவதற்கு வாய்ப்பு உள்ளதாக கூறினார். அதன் பிறகு அகம் தொலைக்காட்சியின் மூலம், பிக் பாஸ் சக போட்டியாளர்களிடமிருந்து ரைசா விடைபெற்றுக் கொண்டார். அவர் விடைபெற்ற பிறகு ஆர்த்தி, ஜூலி, காயத்திரி, சக்தி, பரணி ஆகியோரை அழைத்து நடப்பு விவரங்களை கமல்ஹாசன் அறிந்துக் கொண்டார்.

பின்னர் பிக் பாஸ் வீட்டில் இருந்தவர்கள் மீது இவ்வளவு கோபப்படும் மக்கள் அரசியல்வாதிகளில் தவறுகளை மறந்துவிடுவது ஏன் என்று கமல்ஹாசன் கேள்வி எழுப்பினார். அதோடு அந்த கோபத்தை தேக்கி வையுங்கள்! இன்னும் சில மாதங்களில் தேவைப்படலாம் என அரசியல் பேசினார்.

பின்னர்  மேல் குறிப்பிட்ட ஐவரில் யார் பிக் பாஸ் வீட்டிற்கு மீண்டும் நுழைய யார் ஆசைப்படுகிறீர்கள் எனக் கேட்டப்போது, ஆர்த்தியும், ஜூலியும் விருப்பம் தெரிவித்தார்கள். இன்னும் சில நாட்கள் கழித்து வாய்ப்பு வழங்கப்பட்டால் ஏற்றுக் கொள்வதாக பரணி கூறினார். காயத்திரி விருப்பம் இல்லை என்பதை தெளிவாகக் கூறிவிட்டார்.

ஆனால் சக்தி, பிக் பாஸ் வீட்டிற்கு செல்ல விருப்பமில்லை. ஆனால் செல்ல வேண்டுமென்ற சூழ்நிலை ஏற்பட்டால் யாரையாவது டிரிகெர் செய்யவே உள்ளே செல்வேன் என அதிரடியாகக் கூறினார். கடந்த வார இறுதியின் முடிவில் இடம்பெற்ற புரோமோவில் ஆர்த்தியின் குரல் தெளிவாகக் கேட்டது. அவர்தான் பிக் பாஸ் வீட்டில் நுழைவாரா என்பதை திங்கட்கிழமை இரவு தெரிந்துக் கொள்ளலாம்.

 

spot_img

latest articles

explore more