சனிக்கிழமை, ஜனவரி 25, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > இந்தியா/ ஈழம் > சந்திராயன் 2 விக்ரம் லேண்டரின் பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டது; நாசா அறிவிப்பு
இந்தியா/ ஈழம்முதன்மைச் செய்திகள்

சந்திராயன் 2 விக்ரம் லேண்டரின் பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டது; நாசா அறிவிப்பு

புதுடில்லி. டிசம்பர் 12-

நிலவின் தென் துருவத்தில் விழுந்து நொறுங்கிய விக்ரம் லேண்டரின் பாகங்கள் கண்டுபிடிக்கப் பட்டுள்ளதாக நாசா அறிவித்துள்ளது.

தமிழகத்தின் மதுரையைச் சேர்ந்த சண்முக சுப்பிரமணியன் என்ற பொறியாளரின் வழிகாட்டியால் இது சாத்தியமானது என்று தகவல் வெளியாகி இருக்கிறது. இஸ்ரோவின் சந்திராயன் 2 விண்கலம் கடந்த செப்டம்பர் 7ஆம் தேதி விண்ணில் செலுத்தப்பட்டது.

சந்திரயான் 2- விண்கலத்தில் இணைக்கப்பட்டிருந்த விக்ரம் லேண்டர், நிலவின் தென் துருவ பகுதியில் ஆய்வு மேற்கொள்ள தரை இறங்கியது.

ஆனால், விக்ரம் லேண்டருடனான தொடர்புகள் திடீரென துண்டிக்கப்பட்டு மிகப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இருப்பினும், சந்திராயன்-2 ஒர்பிட்டர், தொடர்ந்து தகவல்களை அனுப்பி வந்தது. இதனிடையே விக்ரம் லேண்டரின் நிலை குறித்த தேடல்களும் ஆய்வுகளும் தொடர்ந்த வேளையில், சண்முக சுப்பிரமணியன் கொடுத்த தகவலின் அடிப்படையில் விக்ரம் லேண்டரின் சிதைந்த பாகங்களை கண்டுபிடித்துவிட்டதாக நாசா அறிவித்துள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன