வியாழக்கிழமை, ஏப்ரல் 2, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > முதன்மைச் செய்திகள் > ரொனால்டோவை முந்தினார் மெஸ்சி!
முதன்மைச் செய்திகள்விளையாட்டு

ரொனால்டோவை முந்தினார் மெஸ்சி!

2018 மற்றும் 2019-ஆம் ஆண்டின் சிறந்த கால்பந்து ஆட்டக்காருக்கான BALLON D’OR விருதை, பார்சிலோனாவின் கோல் மன்னன் லியொனல் மெஸ்சி 6ஆவது முறையாக கைப்பற்றி இருக்கின்றார்.

கடந்த 10 ஆண்டுகளுகளாக, இவ்விருதை மெஸ்சீ மற்றும் கிறிஸ்டியானோ ரொனால்டோவும், 5 முறை மாறி மாறி ஆக்கிரமித்து வந்த வேளையில், 6ஆவது முறையாக அதனை மெஸ்சி வென்று சாதனைப் படைத்துள்ளார்.

கால்பந்து உலகைப் பெருமைப் படுத்தும் வகையில், சர்வதேச கால்பந்து சம்மேளனமான ஃபிபாவுடன் சேர்ந்து ஆண்டு தோறும் இவ்விருதுகளை வழங்கி வந்த பிரான்ஸ் சஞ்சிகை, முதன் முறையாக தனித்து இந்த விருதுகளை வழங்கி உள்ளது.

2019ஆம் ஆண்டிற்கான தலை சிறந்த விளையாட்டாளர் விருது பட்டியலில், லிவர்பூல் தற்காப்பு ஆட்டக்காரர் வார்கில் வன் டிக், ஜுவெண்டெஸின் தாக்குதல் ஆட்டக்காரர் கிறிஸ்டிக்யானோ ரொனால்டோ மற்றும் மெஸ்சி ஆகிய மூவருக்கு இடையில் கடும் போட்டி நிலவியது. இந்நிலையில், அர்ஜெண்டினாவின் புகழ்பெற்ற ஆட்டாக்காரரான மெஸ்சி 54 கோல்களை அடித்ததன் மூலம், இவ்விருதை தட்டிச் சென்றுள்ளார்.

இவ்விருதை குரோஷியாவின் லூகா மோட்ரிச் மெஸ்க்கு வழங்கினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன