சனிக்கிழமை, ஜனவரி 25, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > கலை உலகம் > ஜனவரி முதல் அலெக்ஸ் – சனம் ஷெட்டி நடித்த ”எதிர் வினையாற்று”
கலை உலகம்முதன்மைச் செய்திகள்

ஜனவரி முதல் அலெக்ஸ் – சனம் ஷெட்டி நடித்த ”எதிர் வினையாற்று”

தாயின் அருள் புரோடக்சன் தயாரிப்பில் புதுமுக இயக்குனரும் நடிகருமான அலெக்ஸ் தயாரித்து கதாநாயகனாக அறிமுகமாகும் எதிர் வினையாற்று திரைப்படம் ஜனவரி மாதம் உலகம் முழுவதும் வெளியீடு காண உள்ளது.

இத்திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக மாடல் அழகியும், அழகு தாரகையுமான சனம் ஷெட்டி நடித்துள்ளார். அவருடன் ஆர்.கே சுரேஷ், ஆடுகளம் நரேன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

சென்னையில் நடந்த ஒரு உண்மைச் சம்பவத்தை பின்னணியாக கொண்டு இந்த திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.

இத்திரைப்படத்தின் விளம்பரத்திற்காக இயக்குனரும் நடிகருமான அலெக்ஸ்,  நடிகை சனம் ஷெட்டி மலேசியாவிற்கு வந்துள்ளார்கள்.

மலேசிய மக்கள் மத்தியில் எதிர் வினையாற்று திரைப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன