செவ்வாய்க்கிழமை, ஜனவரி 21, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > மற்றவை > நீர் கட்டண உயர்வுக்கு அனைத்து மாநிலங்களும் ஒப்புதல்! -சேவியர் ஜெயக்குமார்
மற்றவைமுதன்மைச் செய்திகள்

நீர் கட்டண உயர்வுக்கு அனைத்து மாநிலங்களும் ஒப்புதல்! -சேவியர் ஜெயக்குமார்

ஷா ஆலாம், டிச.6-

அடுத்தாண்டு முதல் அமலுக்கு கொண்டு வரக்கூடுமென எதிர்ப்பார்க்கப்படும் நீர் கட்டண உயர்வுக்கு அனைத்து மாநிலங்களும் கொள்கை அளவில் இணக்கம் தெரிவித்திருப்பதாக நீர், நில, இயற்கை வள அமைச்சரான டத்தோ டாக்டர் சேவியர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

ஆயினும், இறுதி முடிவை எடுப்பதற்கு முன்பதாக, பல்வேறு விவகாரங்கள் குறித்து தொடர்ந்து பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

புதிய நீர் கட்டணம் தொடர்பாக, சம்பந்தப்பட்ட மாநிலங்களுடன் மிக விரைவில் சந்திப்பு நடத்தப்படும். கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக, நீர் கட்டண விகிதத்தில் திருத்தம் செய்யப்படவில்லை. நீர் விநியோகத் தடை ஏற்படுவதற்கான சூழ்நிலையைக் குறைக்க நீர் சார்ந்த தொழில்துறைக்கு அதிக நிதி தேவைப்படுவதை மக்கள் புரிந்துக்கொள்ள வேண்டும்.

ஆயினும், புதிய நீர் கட்டணம் மக்களுக்கு சுமையாக இருக்காது என அரசாங்கம் உறுதியளிக்கின்றது. மேலும், அது 2 விழுக்காட்டிற்கும் கூடுதலாக இருக்காது என்பதை தாம் உறுதிபடுத்தப்போவதாகவும் சேவியர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து, நீர் கட்டண உயர்வு தொடர்பான நடைமுறைகள் மற்றும் விதிமுறைகளை ஒழுங்குப்படுத்தும் வகையில், அடுத்தாண்டில், 2006ஆம் ஆண்டு நீர் சேவை தொழில்துறை சட்டத்தில் திருத்தத்தை மேற்கொள்வதற்கும் அரசாங்கம் தயாராக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன