செவ்வாய்க்கிழமை, ஜனவரி 21, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > அரசியல் > பி.கே.ஆர் ஒழுங்கு நடவடிக்கை வாரியத்தின் மீது நம்பிக்கையுள்ளது-அஸ்மின் அலி
அரசியல்முதன்மைச் செய்திகள்

பி.கே.ஆர் ஒழுங்கு நடவடிக்கை வாரியத்தின் மீது நம்பிக்கையுள்ளது-அஸ்மின் அலி

ஆயெர் கெரோ, டிச.6-

பி.கே.ஆரிலிருந்து உச்சமன்ற உறுப்பினரான ஜக்காரியா அப்துல் ஹாமிட் நீக்கப்பட்டது தொடர்பில், மேற்கொள்ளப்பட்டிருக்கும் மேல்முறையீடு நடவடிக்கைகள் முதலில் நிறைவு பெறட்டும் என அக்கட்சியின் துணைத்தலைவரான டத்தோஸ்ரீ அஸ்மின் அலி தெரிவித்துள்ளார்.

பி.கே.ஆரின் ஒழுங்கு நடவடிக்கை வாரியத்தின் மீது தாம் மிகுந்த நம்பிக்கையைக் கொண்டிருப்பதாக கூறியிருக்கும் பொருளாதார விவகார அமைச்சருமான அஸ்மின் அலி, மேல்முறையீட்டு நடவடிக்கைகளுக்கு அனைவரும் மதிப்பளிக்க வேண்டுமெனவும் வலியுறுத்தியுள்ளார்.

இதற்கு முன்பு, ஜக்காரியா மற்றும் பகாங் பி.கே.ஆரைச் சேர்ந்த இஸ்மாயில் டுல்ஹாடி ஆகிய இருவரும் கட்சியிலிருந்து நீக்கப்பட்டதற்கு அஸ்மின் அலி உள்பட 19 உச்சமன்ற உறுப்பினர்களும் நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களும் எதிர்ப்பு தெரிவித்ததோடு, அன்வார் மன்னிப்பு கேட்க வேண்டுமெனவும் அவர்கள் வலியுறுத்தியிருந்தனர்.

கடந்தாண்டு நடைபெற்ற கட்சித் தேர்தலில், அவ்விருவரும் ஊழல் நடவடிக்கைகளில் ஈடுபட்டதால், அவ்விருவரும் கட்சியிலிருந்து நீக்கப்படுவதாக பி.கே.ஆரின் ஒழுங்கு நடவடிக்கை வாரியத்தின் தலைவரான டத்தோ அஹ்மாட் காசிம் கடந்த நவம்பர் 24ஆம் தேதி அறிவித்திருந்தார்.

அக்குற்றச்சாட்டுகள் தொடர்பில், பி.கே.ஆர். மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்திடமிருந்து வலுவான ஆதாரங்களைப் பெற்றிருப்பதாகவும் அவர் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன