செவ்வாய்க்கிழமை, ஜனவரி 21, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > அரசியல் > இஸ்லாத்தை முன்னிலைப்படுத்தும் அம்னோ; சட்டத்தில் திருத்தம்
அரசியல்முதன்மைச் செய்திகள்

இஸ்லாத்தை முன்னிலைப்படுத்தும் அம்னோ; சட்டத்தில் திருத்தம்

கோலாலம்பூர், டிச.7-

73 வருட கட்சியான அம்னோ, இஸ்லாம் சமயத்தை முன்னிலைப்படுத்தும் வகையில், அதன் சட்டத்தின் 3ஆவது பிரிவில் திருத்தத்தை செய்துள்ளது.

இதற்கு முன்பு அப்பிரிவில், இனம், சமயம் மற்றும் நாட்டின் கண்ணியத்தை நிலைநிறுத்தும் வகையில், மலாய் தேசியவாத கொள்கைக்காக போராடும் ஓர் அரசியல் கட்சி எனும் அடிப்படைக் கொள்கையை அம்னோ கொண்டிருந்தது.

தற்போதைய திருத்தத்தின் அடிப்படையில், முதலில் இஸ்லாம் சமயமும் அதன் பிறகே, இனம், நாடு ஆகியவை இடம்பெறுகின்றது. இந்நாட்டின் கூட்டரசு சமயமாக இஸ்லாம் இருப்பதற்கு ஏற்ப அந்த திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

மேலும், வெள்ளிக்கிழமை நடைபெற்ற அம்னோவின் மாநாட்டில், கட்சியின் சட்டங்களில் திருத்தம் செய்யும் வகையில் 13 தீர்மானங்கள் முன்மொழியப்பட்டு ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டன.

பொதுத்தேர்தல்களில் வாக்களிக்கக்கூடிய வாக்காளர்களின் அடிப்படை வயது வரம்பு 18-ஆக குறைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அம்னோவும் அக்கட்சியில் இணையக்கூடிய மலாய் அல்லது பூமிபுத்ரா உறுப்பினர்களின் வயது வரம்பை 18-லிருந்து 16-ஆக குறைத்துள்ளது. அதற்காக அக்கட்சியின் சட்டத்தின் 4.2 பிரிவில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

மேலும், அக்கட்சியின் துணைத்தலைவர் பதவிக்கு ஈடாக மகளிர் பிரிவிற்கான தலைவர் பதவியையும் கருதும் வகையில், சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன