கோவிட்-19 தொற்றிலிருந்து தங்களைப் பாதுகாத்துக்கொள்ள பகாங்கில் உள்ள பழங்குடி மக்கள் காடுகளுக்குள் பதுங்கத் தொடங்கியுள்ளனர்.

பழங்குடி மக்களில் ஒருவருக்குக் இந்தக் கிருமித்தொற்று ஏற்பட்டதைத் தொடர்ந்து அவர்களிடையே அச்சம் நிலவுகிறது. பகாங் மாநிலத்தின் ஜெமெரி கிராம மக்களில் பாதிக்கும் மேலானோர் காடுகளுக்குள் செல்லத் தொடங்கிவிட்டனர்.

அந்தக் கிராமத்திற்குள் யாரும் நுழையாதபடி எல்லைப் பகுதியில் பெரிய கட்டைகளைக் கொண்டு தடுப்பு ஏற்படுத்தியுள்ளனர். கிருமிப்பரவலில் இருந்து தப்பிக்கத் தங்களைத் தனிமைப்படுத்திக்கொள்ளவும், தேவையான உணவுகளைத் தேடிக்கொள்ளவும் காடுகளுக்குள் செல்வதாக அவர்கள் கூறினர்.

வறுமை, சத்துப் பற்றாக்குறை ஆகியவற்றால் பழங்குடியினர் எளிதில் நோய்களால் பாதிக்கப்படுகின்றனர். கேமரன் மலைக்கு அருகில் உள்ள கிராமத்தில் சென்ற வாரம் 3 வயதுப் பழங்குடி இனச் சிறுவனுக்கு கோவிட்-19 கிருமித்தொற்று உறுதிசெய்யப்பட்டது. கிருமித்தொற்றுச் சம்பவங்களால் தென்கிழக்கு ஆசியாவில் மிக மோசமாக பாதிக்கப்பட்டது மலேசியா தான். இதுவரை COVID-19 கிருமித்தொற்றால் மலேசியவில் 3,333 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.